வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புக் கட்டுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயன்பாடு‎[தொகு]

கருநாடக இசை சிறப்புக் கட்டுரை துணைப் பக்கத்தின் வடிவமைப்பு - வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புக் கட்டுரை/வடிவமைப்பு.

Selected articles list[தொகு]

வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புக் கட்டுரை/1
இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முழுக்க கருநாடக இசைக் கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. இவ்விதம் நடக்கும் இசை விழாவே டிசம்பர் இசை விழா என்றழைக்கப்படுகிறது. இவ்விழா நடக்கும் இப்பருவம், டிசம்பர் சீசன் எனப் பரவலாக சொல்லப்படுகிறது. மெட்ராஸ் மியூசிக் சீசன் என்றும் அக்காலம் முதற்கொண்டு சொல்லப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும், கலைஞர்கள் மற்றும் நேயர்கள் பெருமளவில் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள்.


வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புக் கட்டுரை/2
தமிழ் இசைச் சங்கம் என்பது தமிழிசையை வளர்க்கும் நோக்குடன் 1943 ம் ஆண்டு நிறுவப்பட்ட அமைப்பு ஆகும். தமிழ்நாட்டில் பிறமொழிப் பாடல்கள் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் தமிழ் இசைக்கு நிலையான அமைப்புசார் ஆதரவை வழங்கும் நோக்குடன் இது தொடங்கப்பட்டது. இதனை அண்ணாமலை செட்டியார் அவர்கள் தொடங்கினார்கள். இன்று "தமிழ் இசை வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சிக்கும், இசை மேதைகளை ஒருங்கிணைக்கும் சங்கமாகவும், இசை வல்லுநர்களை உருவாக்கும் கல்லூரியாகவும் தமிழ் இசைச் சங்கமானது விளங்கி வருகின்றது. தமிழ்ப் பண் ஆராய்ச்சியில் பெரும் பங்கினை தான் தம் பெரும் தமிழ்ச் சேவையால் தக்கவைத்துக் கொண்டுள்ளது."


வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புக் கட்டுரை/3
கருநாடக இசை வல்லுநர் ஒருவரை, ஆண்டுதோறும் தெரிவுசெய்து அவருக்கு சங்கீத கலாநிதி எனும் விருதினை சென்னை மியூசிக் அகாதெமி வழங்கிச் சிறப்பிக்கிறது. சங்கீத என்பதற்கு இசை எனவும், கலாநிதி என்பதற்கு கலையின் பெருஞ்செல்வம் (புதையல்) எனவும் பொருள். ஆக, சங்கீத கலாநிதி என்பதற்கு 'கருநாடக இசைக் கலையின் பெருஞ்செல்வம்' என்பது பொருள். கருநாடக இசையுலகில் மிக உயர்ந்த விருதாக இவ்விருது அனைவராலும் கருதப்படுகிறது.


வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புக் கட்டுரை/4
இசைக் கலைஞர் ஒருவரை, ஆண்டுதோறும் தெரிவுசெய்து அவருக்கு இசைப்பேரறிஞர் எனும் விருதினை சென்னையிலுள்ள தமிழ் இசைச் சங்கம் வழங்கிச் சிறப்பிக்கிறது. தமிழிசையினைப் பரப்பும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் 12 நாட்களுக்கு தமிழ் இசைச் சங்கத்தால் தமிழிசை விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவின் தொடக்க நாளன்று, அந்த ஆண்டிற்கென தெரிவுசெய்யப்பட்ட இசைக் கலைஞருக்கு "இசைப்பேரறிஞர்" என்னும் விருதும், பொற்பதக்கம், பொன்முடிப்பும் அளிக்கப்பெறுகிறது.


வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புக் கட்டுரை/5
மியூசிக் அகாதெமி என்றழைக்கப்படும் கலை மன்றம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ளது. இக்கலை மன்றம், 'சங்கீத வித்வத் சபை' என்றும் அழைக்கப்படுகிறது. கருநாடக இசையின் நலம் விரும்பிகள் மற்றும் இசை விரும்பிகள், அப்போதைய மெட்ராஸ் நகரத்தில் ஒரு கலை மன்றத்தை நிறுவ விரும்பினர். அகில இந்திய இசை மாநாடு 1927 ஆம் ஆண்டு சென்னையில் நடந்தபோது, இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய இசையை வளர்க்கும் முகமாகவும், இசையைப் பற்றி தத்துவம் மற்றும் பயிற்சி ரீதியாக கற்றுத்தரும் வகையிலும் இக்கலை மன்றம் இருக்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். இந்த மாநாட்டுக்கென அமைக்கப்பட்ட வரவேற்பு குழு, 1928 ஆம் ஆண்டு மார்ச் 5 அன்று தற்காலிகமானதொரு செயற்குழுவை தேர்ந்தெடுத்தது. கலை மன்றத்தை நிறுவும் பொறுப்பு அச்செயற்குழுவிடம் தரப்பட்டது.


வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புக் கட்டுரை/6
முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என்னும் மூன்றாகும். இதில் இயற்றமிழ் பண்ணோடு புணர்ந்து தாளத்தோடு நடைபெறும்போது அது இசைத்தமிழாக உருவெடுக்கிறது. அத்தகைய தமிழிசை, தமிழனின் வாழ்வியலோடு பண்டு முதல் பின்னிப் பிணைந்து வந்திருக்கிறது. பழந்தமிழ் மக்கள் நுட்பமான இசைப்புலமையும், இசை இலக்கண அறிவும் பெற்றிருந்தனர். கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் எழுந்த நூல்களான தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் ஆகிய நூல்கள் இது பற்றிக் கூறுகின்றன. பழந்தமிழ் மக்கள் இயற்கையில் எழும் ஒலிக் கூறுகளை நுண்மையாக ஆராய்ந்தனர். அதனை ஒட்டி இனிமையான ஓர் இசை முறையை உருவாக்கினர். படிப்படியாகப் பண்படுத்திய அந்த இசை முறையைப் "பண்" என்று அழைத்தனர். வாழும் நிலத்திற்கேற்பப் பண்களை வகைப்படுத்தினர். நேரத்திற்குப் (காலத்திற்குப்) பொருந்த பண்கள் பாடினர். சுவைக்குத் தகுந்த பண்கள் பாடினர். பண்கள் 103 என்றும் வகுத்தனர்.


வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புக் கட்டுரை/7

வீணை

வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம். பண்டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17-நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது. குடம், மேற்பலகை, தண்டி, மாடச்சட்டம், சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் ஆகியவை வீணையின் பாகங்களாகும்.

வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது.


வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புக் கட்டுரை/8

தவில்

தவில் என்பது நாதஸ்வரத்திற்குத் துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியாகும். கருநாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இது தோம்பு உருவத்தில் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். விழாக்காலங்களிலும் திருமணம், குழந்தைக்குக் காது குத்தல் போன்ற நன்நிகழ்ச்சிகளிலும் இதன் பயன்பாடு அதிகம். விலங்கின் தோலால் இழுக்கப்பட்டு வளையத்தைக் கொண்டு ஓட்டில் கட்டப்படிருக்கும் இந்தக் கருவியில், வலது பக்கம் இடது பக்கத்தைவிடச் சற்று பெரியதாக இருக்கும். தவில் வாசிப்பவர் ஒரு தோல் கயிற்றால் தனது தோளின் மீது தவில் கருவியை மாட்டி முழக்குவார். வலது பக்கம் வலது கையாலும் இடது பக்கம் விரல்களாலும் முழக்கப்படும். எல்லா விரல்களிலும் கவசங்கள் அணியப்பட்டிருக்கும். இடது கையில் 'Portia' மரத்தால் செய்யப்பட்ட குச்சியை பயன்படுத்துவர்.


வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புக் கட்டுரை/9

வயலின்

வயலின் (பிடில்) என்ற நரம்பு இசைக்கருவி பழங்காலத்தில் பிடில் (fiddle) என்று வழங்கப்பட்டது. இன்று அரங்கிசைக்கு இன்றியமையாத துணைக் கருவியாக (பக்க வாத்தியம்) இது விளங்குகின்றது. இக்காலத்தில் நாம் பயன்படுத்தும் வயலின் ஐரோப்பியர்களால் 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஸ்ட்ராடிவேரியஸ் (Stradivarius) என்னும் இத்தாலியர் இதனை உருவாக்கினார். தென்னிந்திய இசை முறைமையான கருநாடக இசையில், வயலின் தற்போது முக்கியமான கருவியாகப் பயன்படுகின்றது. இங்கு இது பாலசுவாமி தீட்சிதர் (1786 - 1858) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் 1824 இல் எட்டயபுரம் சமஸ்தான வித்துவானாக இருந்தவர்.


வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புக் கட்டுரை/10
குறை ஒன்றும் இல்லை என்பது திருவேங்கடக் கடவுள் மீது பாடப்பட்ட ஒரு தமிழ்ப்பாடல். இப்பாடலை எழுதியவர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஆவார். தமிழகத்தில் மிகவும் பிரபலமாக உள்ள இப்பாடல், ராக மாலிகையின் அடிப்படையில் அமைந்த இப்பாடல் பெரும்பாலான கருநாடக இசைக் கச்சேரிகளில் 'துக்கடா'வாகப் பாடப்படுகிறது. சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியால் எழுதப்பட்ட ஒரே ஒரு பாடல் இதுவாகும். இந்தப் பாடல் எழுதப்பட்ட நாள் குறித்து தகவல் எதுவும் இல்லை. (அவரது வாழ்வில் நிகழ்ந்த ஒரு துக்க சம்பவத்தின் போது இப்பாடலை இயற்றியதாக கூறப்படுகிறது) இந்தப் பாடலுக்கு இசை வடிவம் தந்தவர் கடையநல்லூர் வெங்கட்ராமன் ஆவார். மறைந்த இசை மேதை பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமியால் பாடப்பட்டிருக்கும் இப்பாடல், இசையுலகில் மிகப் பிரபலமானது.


முன்மொழிதல்[தொகு]

இந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் சிறப்புக் கட்டுரைகளின் தொடுப்பை இங்கு முன்மொழியவும்.

  1. தற்போது எதுவும் இல்லை.