டிசம்பர் இசை விழா (சென்னை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முழுக்க கருநாடக இசைக் கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. இவ்விதம் நடக்கும் இசை விழாவே டிசம்பர் இசை விழா என்றழைக்கப்படுகிறது. இவ்விழா நடக்கும் இப்பருவம், டிசம்பர் சீசன் எனப் பரவலாக சொல்லப்படுகிறது. மெட்ராஸ் மியூசிக் சீசன் என்றும் அக்காலம் முதற்கொண்டு சொல்லப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும், கலைஞர்கள் மற்றும் நேயர்கள் பெருமளவில் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

வரலாறு[தொகு]

1927 ஆம் ஆண்டு மியூசிக் அகாதெமி தொடங்கப்பட்டதைக் குறிக்கும் முகமாக இசை விழா கொண்டாடப்பட்டது. ஒரு மாத காலம் நீடிக்கும் இந்த விழாவில் கச்சேரிகள், ஹரி கதைகள், செயல் விளக்கத்துடன்கூடிய இசை விரிவுரைகள், விருது மற்றும் பட்டம் வழங்குதல் போன்றவை பாரம்பரியமாக நிகழ்த்தப்படுகின்றன. காலப்போக்கில் நடனம் மற்றும் நாடகங்களும் இவ்விழாவில் இடம்பெற்றன.

சிறப்பு[தொகு]

டிசம்பர் இசை விழா, தற்போது பெரிய அளவில் வளர்ச்சியுற்று உலகின் மிகப்பெரிய கலை விழாவாக விளங்குகிறது.[1] ஒரு புள்ளி விவரம்:
டிசம்பர் 2004 - ஜனவரி 2005 பருவத்தில் 1200 கலை நிகழ்ச்சிகள், 600 கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டன.
700 - வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகள்
250 - இசைக்கருவி நிகழ்ச்சிகள்
200 - நடன நிகழ்ச்சிகள்
50 - நாடகம் மற்றும் பிற நிகழ்ச்சிகள்

கலை மன்றங்களின் பட்டியல்[தொகு]

நிகழ்ச்சிகள் கலை மன்றங்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. பிரபலமான கலை மன்றங்கள் இங்கு பட்டியல்படுத்தப்பட்டுள்ளன:

  • பிரம்ம ஞான சபா
  • இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
  • கலாரசனா
  • கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்
  • மியூசிக் அகாதெமி
  • முத்ரா
  • நாத இன்பம்
  • நாரத கான சபா
  • நுங்கம்பாக்கம் கல்ச்சுரல் அகாதெமி
  • ரசிக ரஞ்சனி சபா
  • ஸ்ரீ கிருஷ்ண கான சபா
  • ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா
  • ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா
  • தமிழ் இசைச் சங்கம்
  • ஹம்சத்வனி என். ஆர். ஐ. சபா
  • திருவல்லிக்கேணி இசை விழா

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]