வனஜா ஐயங்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வனஜா ஐயங்கார்
பிறப்புஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு2001
பணிகணிதவியலாளர்
கல்வி
அறியப்படுவதுகல்வியாளர்
வாழ்க்கைத்
துணை
மோகித் சென்
விருதுகள்பத்மசிறீ
ஆந்திரப் பிரதேச அரசு நல்லாசிரியர் விருது
ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் சக உறுப்பினர்

வனஜா ஐயங்கார் (Vanaja Iyengar) ஓா் இந்திய கணிதவியலாளரும், கல்வியாளருமாவார்.[1] தென்னிந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் திருப்பதியிலுள்ள சிறீ பத்மாவதி மகிளா விஸ்வவித்யாலயத்தின் நிறுவனரும் துணை வேந்தருமாவாா்.[2] ஆந்திர மகிளா சபா தகவலியல் பள்ளியின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.[3] இந்திய அரசு இவருக்கு 1987 ஆம் ஆண்டில் இந்திய அரசின் நான்காவது மிகப் பொிய விருதான பத்மசிறீ விருதை வழங்கி கவுரவித்தது.[4]

சுயசரிதை[தொகு]

பிரிக்கப்படாத பழைய ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்த இவர் ஐதராபாத்தில் தனது ஆரம்ப கல்வி முடித்தார்[5] 1950 ஆம் ஆண்டில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் உயர் கல்வி பெற்றார், அதன் பிறகு யுகோசுலாவியா, செக்கோசிலோவாக்கியா மற்றும் அங்கேரி ஆகிய இடங்களில் மாணவர் மன்றங்களில் பங்கேற்றார்.[6] உசுமானியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியேற்ற இவா் அப்பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லுாாிகளான தெலங்காணா மகளிர் பல்கலைக்கழகம், நிசாம் கல்லூரி ஆகியவற்றிலும் பணியாற்றினாா்.

உசுமானியாவில் இருந்தபோது, 1958 ஆம் ஆண்டில் தில்லி பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் ஒரு முனைவர் பட்டம் பெற்றார். உசுமானியா பல்கலைக்கழகத்தில் வாசகா், பேராசிரியர், கணிதவியல் துறையின் தலைவா் மற்றும் பல்கலைக்கழக மகளில் கல்லுாாியின் முதல்வா் ஆகிய பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளாா். சிலகாலம் பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் பதவி வகித்துள்ளாா். 1983 ஆம் ஆண்டு சிறீ பத்மாவதி மகிளா விஸ்வவித்தியாலயம் என்ற அனைத்து மகளிா் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது, இவர் அதன் துணை வேந்தராக நியமிக்கப்பட்டு 1986 வரை அப்பதவியில் தொடர்ந்தார்..[7] இவர் உசுமானியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் நிறுவனர் உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்தார். ஆந்திர மகிளா சபாவின் ஆயுள்கால அறங்காவலராக இருந்த இவர் அதன் துணைத் தலைவராகவும் தலைவராகவும் பணிபுரிந்தார்.இப்பணியை1994 முதல் தனது இறப்பு வரையிலும் செய்தாா். இவா் கல்வியில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதிப் பிரபலமானாா்.[8]

1987 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது. மேலும், ஆந்திர மாநில அரசாங்கத்திலிருந்து சிறந்த ஆசிரியர் விருது பெற்றார். மேலும் ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் ஓா் உறுப்பினராகவும் இருந்தார். 2001 ஆம் ஆண்டில் இவர் காலமானாா், இவரது கணவர் மோகித் சென், ஒரு பிரபலமான பொதுவுடைமை அறிஞர், இவரும் ஈராண்டுகளுக்குப் பின்னர் இறந்துவிட்டார்.[9] இத்தம்பதியர் குழந்தை இல்லாதவர்கள்.

இதனையும் பாா்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "A man called Mohit Sen". The Hindu. 18 May 2003. பார்க்கப்பட்ட நாள் August 20, 2015.
  2. "Kameswaramma Kuppuswamy Memorial Lecture" (PDF). Indian Institute of World Culture. 2015. பார்க்கப்பட்ட நாள் August 20, 2015.
  3. "AMS School of Informatics". AMS School of Informatics. 2015. பார்க்கப்பட்ட நாள் August 21, 2015.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
  5. "Vanaja Iyengar - Inflibnet" (PDF). Inflibnet. 2015. பார்க்கப்பட்ட நாள் August 21, 2015.
  6. "Prof (Smt) Vanaja Iyengar –Founder AMSSOI". Bispindia. 2015. Archived from the original on மார்ச் 4, 2016. பார்க்கப்பட்ட நாள் August 21, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Mohit Sen (An Autobiography)". Exotic India. 2015. பார்க்கப்பட்ட நாள் August 21, 2015.
  8. A. Ranganathan; Madhav Pundalik Pandit; Saligrama Krishna Ramachandra Rao; VANAJA IYENGAR (1986). "Sir William Jones: Savant Extraordinary and Cultural Envoy, Issues 64-71". Indian Institute of World Culture. பார்க்கப்பட்ட நாள் August 21, 2015.
  9. "Veteran communist leader Mohit Sen dead". Rediff.com. 4 May 2003. பார்க்கப்பட்ட நாள் August 21, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனஜா_ஐயங்கார்&oldid=3799872" இலிருந்து மீள்விக்கப்பட்டது