லிங்டின்
| உரலி | www.linkedin.com |
|---|---|
| வெளியீடு | மே 2003 Mountain View, CA, USA |
| தற்போதைய நிலை | Active |
லிங்டின் என்பது வணிக ரீதியான சமூக வலைப்பின்னல் தளமாகும். இத்தளத்தின் மூலம் வெவ்வேறு நாடுகளில் பணிபுரியும் நபர்கள், தொழிலதிபர்கள், சிறுதொழில் உற்பத்தியாளர்கள், பல்வேறு வகையான சேவையை அளிப்பவர்கள் என பதவிகளில் இருப்போர் அனைவரும் தத்தம் தொழில், வேலை, சேவை ரீதியாக இணைக்கப்பட்டு தத்தம் விபரங்களை பகிர்வதற்கு லிங்க்டுஇன் உதவுகிறது. இத்தளத்தின் மூலம் வணிகத்தொடர்புகள், தகவல் பரிமாற்றங்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் சிறப்பு அறிமுகங்கள், புதிய தொழில் வாய்ப்புகள் போன்றவை எளிதாக கையாளப்படுகின்றன.
லிங்க்டுஇன் பதிவு செய்யப்பட்ட தமது உறுப்பினர்கள் தங்களது விபரங்களையும் சேமித்து வைத்துக் கொண்டு தமக்கு தெரிந்தவர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கிறது. உறுப்பினரின் பட்டியலில் உள்ள ஒவ்வொரு நபர்களும் இணைப்பிகள்(Connections) என்றழைக்கப்படுகிறார்கள். இணைப்பியாக லிங்க்டுஇன்னில் பதிவு செய்யப்பட்ட எவரையும் வரவேற்கலாம்.