ரொசெட்டா விண்கலம்
| இயக்குபவர் | ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் |
|---|---|
| முதன்மை ஒப்பந்தக்காரர் | ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் |
| திட்ட வகை | வால்வெள்ளியை சுற்றிவரல்/தரையிறங்கல் |
| அணுகிய விண்பொருள் | பூமி, செவ்வாய், 2867 ஸ்டெயின்ஸ், 21 லுட்டேசியா |
| Satellite of | 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ |
| ஏவப்பட்ட நாள் | மார்ச் 2, 2004, 07:17 UTC |
| ஏவுகலம் | ஆரியான் 5 |
| திட்டக் காலம் | 9 ஆண்டுகள், 2 மாதங்கள், 20 நாட்கள் |
| Orbital decay | N/A |
| தே.வி.அ.த.மை எண் | 2004-006A |
| இணைய பக்கம் | ESA-Rosetta |
ரொசெட்டா (Rosetta) என்பது 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ என்ற வால்வெள்ளியை ஆராய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒரு தானியங்கி விண்கலம் ஆகும். இவ்விண்கலம் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது: ரொசெட்டா விண்ணாய்வி, மற்றையது ஃபைலீ தரையிறங்கி (Philae) ஆகியனவாகும். ரொசெட்டா விண்கலம் 2004 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் நாள் ஆரியான் 5 ஏவுகலம் மூலமாக ஏவப்பட்டது. 2014 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இது வால்வெள்ளியை அடையும். ரொசெட்டா விண்ணாய்வி வால்வெள்ளியில் சுற்று வட்டத்தில் சுற்றி வந்து நீண்ட காலத்து இவ்வாள்வெள்ளியை ஆராயும். அதே வேளையில், 2014 நவம்பர் 10 ஆம் நாள் ஃபைலீ வாள்வெள்ளியில் தரையிறங்கி அதன் மேற்பரப்பை ஆராயும். இரண்டு விண்கலங்களும் பெருமளவு சோதனைகளை நடத்தி வால்வெள்ளியை பரந்த அளவில் ஆய்வு செய்து தகவல்களை பூமிக்கு அனுப்பும்.[1].
ரொசெட்டா விண்கலம் வால்வெள்ளியை நோக்கிய பயணத்தில் இரண்டு தடவை சிறுகோள் அணுகலை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருந்தது[2]. 2008 செப்டம்பரில் 2867 ஸ்டெயின்ஸ் என்ற சிறுகோளையும், 2010 சூலையில்[3], லுட்டேசியா என்ற சிறுகோளையும் அணுகியிருந்தது (flyby). [[2011] சூன் 8 ஆம் நாள் இவ்விண்கலம் ஆழ்ந்த தூக்கத்துக்கு அனுப்பப்பட்டது[4]. இது மீண்டும் 2014 ஆம் ஆண்டு சனவரி 20 விழித்துக் கொள்ளும்.
திட்ட காலக்கோடு [தொகு]
- முதலாவது பூமி அணுகல் (மார்ச் 4, 2005)
- செவ்வாய் அணுகல் (பெப்ரவரி 25, 2007)
- இரண்டாவது பூமி அணுகல் (நவம்பர் 13, 2007 )
- 2867 ஸ்டையின்ஸ் சிறுகோல் அணுகல் (செப்டம்பர் 5, 2008)
- மூன்றாவது பூமி அணுகல் (நவம்பர் 13, 2009)
- 21 லுட்டேசியா சிறுகோலை அணுகல் (சூலை 10, 2010)
- ஆழ் நிலை உறக்கத்தில் (8 சூன் 2011 - 20 சனவரி 2014)
- வாள்வெள்ளியை அண்மித்தல் (சனவரி-மே 2014)
- வால்வெள்ளியை ஆராய்தல் (ஆகத்து 2014)
- வால்வெள்ளியில் தரையிறங்கல் (நவம்பர் 2014)
- வால்வெள்ளி சூரியனைச் சுற்றும் போது அதனைப் பின்தொடரல் (நவம்பர் 2014 - திசம்பர் 2015)
ரொசெட்டாவின் தற்போதைய நிலை பற்றி http://www.esa.int/SPECIALS/Rosetta/SEMRZF1PGQD_0.html தளத்தில் பெறலாம்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Rosetta at a glance (4 October 2010) - ESA
- ↑ Glassmeier K. H., Boehnhardt H., Koschny D., Kührt E., Richter I. (2007). "The ROSETTA Mission: Flying towards the Origin of the Solar System". Space Sci. Rev. 128: 1–21. doi:10.1007/s11214-006-9140-8. Bibcode: 2007SSRv..128....1G.
- ↑ Jonathan Amos - Asteroid Lutetia has thick blanket of debris (4 October 2010) - BBC News
- ↑ "Rosetta comet probe enters hibernation in deep space". ESA. June 8, 2011. http://www.esa.int/esaMI/Rosetta/SEM38RJ4LOG_0.html. Retrieved June 8, 2011.
| விக்கி ஊடக நடுவத்தில் ரொசெட்டா தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
வெளி இணைப்புகள் [தொகு]