67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
கண்டுபிடிப்பு
|
|
|---|---|
| கண்டுபிடித்தவர்(கள்) | கிளிம் இவானொவிச் சுரியூமொவ் மற்றும் சிவெத்லானா இவனொவ்னா கெராசிமென்கோ |
|
Designations
|
|
| வேறு பெயர்கள் | 1982 VIII; 1982f; 1989 VI; 1988i; 1969 R1; 1969 IV; 1969h; 1975 P1; 1976 VII; 1975i |
| காலகட்டம்செப்டம்பர் 3, 2002 | |
| சூரிய சேய்மை நிலை | 5.722 வா.அ |
| சூரிய அண்மை நிலை | 1.2923 வா.அ |
| அரைப் பேரச்சு | 3.5072973258 வா.அ |
| மையத்தொலைத்தகவு | 0.6315 |
| சுற்றுப்பாதை வேகம் | 6.568 ஆ |
| சாய்வு | 7.1205° |
|
சிறப்பியல்பு
|
|
| பரிமாணங்கள் | 4 கிமீ விட்டம் |
சுரியூமொவ்-கெராசிமென்கோ வால்வெள்ளி (Comet Churyumov–Gerasimenko, அதிகாரபூர்வமாக 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ (67P/Churyumov–Gerasimenko), என்பது 6.6 ஆண்டுகள் சுற்றுக்காலத்தைக் ஒரு வால்வெள்ளி ஆகும். இந்த வால்வெள்ளியை நோக்கி ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தினால் ரொசெட்டா என்ற விண்கலம் 2004, மார்ச் 2 ஆம் நாள் அனுப்பப்பட்டது[1]. இவ்விண்கலம் வால்வெள்ளியில் 2014 ஆம் ஆண்டில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டுபிடிப்பு [தொகு]
ஹபிள் தொலைநோக்கி மூலம் அவதானிக்கப்பட்ட வால்வெள்ளியின் உட்புறம்
1969, செப்டம்பர் 11 இல் சோவியத் ஒன்றியம், அல்மா-ஆட்டா வானியற்பியல் கல்லூரியில் சிவெத்லானா கெரசிமென்கோ என்பவரால் எடுக்கப்பட்ட படம் ஒன்றை ஆராய்ந்த கிளிம் சுரியூமொவ் என்பவரால் இந்த வால்வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Krolikowska, Malgorzata (2003). "67P/Churyumov–Gerasimenko – potential target for the Rosetta mission". Acta Astronomica 53: 195–209. arXiv:astro-ph/0309130. Bibcode: 2003AcA....53..195K.