ரிச்சர்ட் கோல்மர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரிச்சர்ட் என் கோல்மர் (Richard N Holmer) (பிறப்பு : 16 பிப்ரவரி 1945) இடாகோ மாநில பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியராக உள்ளார். ஈவர் மெக்சிக்கோ, சமோவா, அமெரிக்க பாலைவன மேற்கு மற்றும் அலாசுகாவில் விரிவான தொல்பொருள் ஆராய்ச்சிகளை நடத்தினார். [1]

கொலராடோவின் டென்வரில் பிறந்த கோல்மர், உட்டா பல்கலைக்கழகத்தில் படித்தார். அங்கு இவர் இளங்கலை (1972), முதுகலை (1975) மற்றும் முனைவர் படிப்பு (1978) ஆகியவற்றை முடித்தார். 1983 ஆம் ஆண்டு முதல் ஐடாகோ மாநில பல்கலைக்கழகத்தில் கற்பித்தார். கோல்மர் தனது கல்விப் படிப்பிற்கு முன்னர், வட கரோலினா, பனாமா மற்றும் வியட்நாமில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவ, சிறப்புப் படைகளில் ஒரு சார்சென்டாக இருந்தார்.

ஐடாகோ இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (1989-1993) மற்றும் சுற்றுச்சூழல் மானுடவியல் மையம் (1984-1998) மற்றும் இடாகோ தொல்பொருள் சங்கத்தில் (1984-1986) இயக்குநர் குழு உறுப்பினர் உட்பட பல்வேறு புகழ்பெற்ற பதவிகளை வகித்துள்ளார். 1983 ஆம் ஆண்டு முதல் உட்டா தொழில்முறை தொல்பொருள் கவுன்சிலின் உறுப்பினராக உள்ளார்.

அவர் ஏராளமான புத்தகங்கள் மற்றும் மோனோகிராப்களையும் வெளியிட்டுள்ளார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Department of Anthropology | Idaho State University".
  2. [1] Samoa Village Patterns: Four Examples by Jesse D. Jennings, Richard Holmer and Gregory Jackmond, University of Utah. Journal of the Polynesian Society, Vol. 91. No. 1, 1982. Retrieved 2 November 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_கோல்மர்&oldid=3818455" இலிருந்து மீள்விக்கப்பட்டது