கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூ அகலப்பட்டை & கம்பி வடம் இந்தியா லிமிடெட் (YOU Broadband & Cable India Limited) மும்பையிலிருந்து இயங்கும் ஓர் அகலப்பட்டை இணையச் சேவை வழங்கும் நிறுவனமாகும். இந்தியாவில் 13 நகரங்களில் ஒளியிழை-ஓரச்சு கலப்பு (HFC) கம்பி வடம் மூலமாக அகலப்பட்டை இணையச் சேவைகள் வழங்கி வருகிறது. 600,000 வீட்டு/நிறுவன பயனாளர்களுக்குச் சேவை வழங்கி வருகிறது. இதன் மேலாண்மை இயக்குநராக ஈ.வி.எஸ்.சக்கரவர்த்தி பணி புரிகிறார்.[1] இந்நிறுவனம் பிஜி குழுமம் என்ற பிரித்தானிய எரிவளி நிறுவனத்தின் துணை நிறுவனமாக இது இக்காரா டெலிகாம் இந்தியா என அறியப்பட்டிருந்தது. 2006ஆம் ஆண்டு சிட்டி குழுமத்தின் பன்னாட்டு இடர்மிகு புத்தொழில் முதலீடு நிறுவனம் கையகப்படுத்தி[1] இதன் பெயரை யூ டெலிகாம் என மாற்றியது. தற்போது இது யூ அகலப்பட்டை & கம்பி வடம் இந்தியா லிமிடெட் என பெயரிடப்பட்டுள்ளது.
சான்றுகோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 "Tantis buy 49% in You Telecom arm". Business-standard.com (9 December 2008). பார்த்த நாள் 16 July 2010.
வெளி இணைப்புகள் [தொகு]
|
இந்திய தொலைதொடர்பு நிறுவனங்கள் |
|
| நகர்பேசி |
| ஜிஎஸ்எம் |
|
|
| சிடிஎம்ஏ |
|
|
| கம்பி இணைப்பு |
|
|
|
| இணையம் |
|
|
| தொலைக்காட்சி |
|
|
| வானொலி |
|
|