டாட்டா ஸ்கை
| வகை | கூட்டு நிறுவனம் |
|---|---|
| நிறுவுகை | 2004 |
| தலைமையகம் | மும்பை, இந்தியா |
| சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
| முக்கிய நபர்கள் | ஹரித் நாக்பால் (நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி) |
| தொழில்துறை | ஊடகம் |
| உற்பத்திகள் | டி.டீ.எச். சேவை & செயற்கைக்கோள் தொலைக்காட்சி |
| தாய் நிறுவனம் |
|
| இணையத்தளம் | TataSky.com |
டாட்டா ஸ்கை என்பது இந்தியாவில் உள்ள ஒரு டி.டீ.எச் மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஆகிய சேவைகளை வழங்கும் நிறுவனம் ஆகும். இது இன்சாட் (INSAT) 4A செயற்கைக்கோள் உதவியுடன் எம்பெக்-2 தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குகிறது.
கேபிள் தொலைக்காட்சி, மற்றும் மற்ற டி.டீ.எச். சேவை வழங்கிகளான ஏர்டெல் டிஜிட்டல் டிவி, ரிலையன்ஸ் பிக் டிவி, டிடி டைரக்ட் +, டிஷ் டிவி, சன் டைரக்ட் மற்றும் வீடியோகான் டி2எச் போன்றவை அதன் முக்கிய போட்டி நிறுவனங்கள் ஆகும்.
வரலாறு [தொகு]
இது டாட்டா குழுமம் நிறுவனமும், ஸ்டார் டிவி நிறுவனமும் இனைந்து உருவாக்கிய ஒரு கூட்டு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 2004ல் ஒருங்கிணைக்கப்பட்டது. எனினும் இது 2006ல் தான் செயல்படத்தொடங்கியது. இது தற்போது 196 சேனல்களை (டிசம்பர் 2010 வரை) வழங்குகிறது.
டாட்டா ஸ்கை எச்டி [தொகு]
டாட்டா ஸ்கை எச்டி ஜூன் 14, 2010, அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நிகழ்ச்சிகளை மிகத் தெளிவாக காண முடியும்.