ஆத்வே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்வே கேபிள் & டாட்டாகொம் லிமிடெட்
வகைபொது
தலைமையகம்மும்பை, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
முதன்மை நபர்கள்பாரத் ஷா (தலைவர்)
கே. ஜெயராமன் (மே.இ & சிஈஓ)
தொழில்துறைதொலைதொடர்பு
ஒளிபரப்பு
உற்பத்திகள்கம்பிவடத் தொலைக்காட்சி, அகலப்பட்டை இணையம், எண்ணிமக் குரல், வீட்டுப் பிணையம்
இணையத்தளம்www.hathway.com

ஆத்வே கேபிள் & டாட்டாகொம் லிமிடெட் (Hathway Cable & Datacom Ltd, தேபசHATHWAY , முபச533162 ) இந்தியாவில் மும்பையிலிருந்து இயங்கும் ஓர் முதன்மை கம்பிவடத் தொலைக்காட்சி சேவை வழங்குனர் ஆகும்.[1] ஐதராபாத், மும்பை, புனே, பெங்களூரு இந்தூர் உட்பட இந்தியாவின் பல நகரங்களில் தனது சேவையை வழங்கி வருகிறது. இந்தியாவில் கம்பிவடத் தொலைக்காட்சிக்கான கம்பிவடம் வழியே அகலப்பட்டை இணைய அணுக்கமும் வழங்கத் தொடங்கிய முதல் நிறுவனம் ஆத்வே ஆகும். திவ்ய பாசுகர் நிறுவனத்தின் பாசுகர் மல்டிநெட் சேவையிலும் குசராத் டெலிலிங்கசு நிறுவனத்திலும் 51% பங்கு ஆத்வேக்கு உள்ளது. 2006ஆம் ஆண்டில் கம்பிவடத் தொலைக்காட்சி சேவைகளை எண்ணிம வடிவத்தில் வழங்கத் தொடங்கியது.[2] தனது சேவையில் உயர் வரையறு தொலைக்காட்சி அலைவரிசைகளையும் எண்ணிம ஒளிதப் பதிவுகருவியையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

சான்றுகோள்கள்[தொகு]

  1. "Hathway Cable & Datacom Ltd Annual Report 2009-2010" (PDF). பார்க்கப்பட்ட நாள் 4 June 2011.
  2. http://www.rapidtvnews.com/index.php/200903123356/hathway-offers-indias-first-cable-pvr.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்வே&oldid=3908854" இலிருந்து மீள்விக்கப்பட்டது