யுரானிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுரானிடே
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
யுரானிடே
துணைக் குடும்பம்

அசினே
யுரானினே
மைக்ரோனினே
எப்பிலெமினே

யுரானிடே (Uraniidae) என்பது நான்கு துணைக் குடும்பங்களைக் கொண்டஅந்துப்பூச்சி குடும்பம் ஆகும். இந்த குடும்பத்தில் 90 பேரினங்கள் சுமார் 700 சிற்றினங்கள் உள்ளன. இவை அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தோ-ஆஸ்திரேலியாவின் வெப்பமண்டல பகுதி முழுவதும் காணப்படுகின்றன.[1] சில வெப்பமண்டல சிற்றினங்கள் பிரகாசமான, பட்டாம்பூச்சி போன்ற வண்ணங்களுடன் அறியப்படுகின்றன. மேலும் இவை சூரிய அஸ்தமன அந்துப்பூச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன (கிரிசிரிடியா ரைபியசு). இத்தகைய அந்துப்பூச்சிகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. இதனுடைய பிரகாசமான வண்ணம் வேட்டையாடும் உயிரிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக உள்ளது.

யுரேனிடே குடும்பத்தில் பகலாடி மற்றும் இரவாடுதல் சிற்றினங்கள் உள்ளன. பகல் நேரத்தில் பறக்கும் இனங்கள் பொதுவாக இரவு நேர அந்துப்பூச்சிகளை விட மிகவும் குறிப்பிடத்தக்க வண்ணம் மற்றும் செயல்பாட்டுடன் காணப்படும். பகலில் காணப்படும் சிற்றினங்கள் மாறுபட்ட செதில்கள் மற்றும் பல வால்களைக் கொண்டுள்ளன. இவை பெரும்பாலும் பட்டாம்பூச்சிகள் என்று தவறாகக் கருதப்படுவதற்கு வழிவகுக்கின்றது. இதற்கு நேர் மாறாக, இரவு நேரச் சிற்றினங்கள் பொதுவாகச் சிறிய, வெளிர் நிற வண்ணத்தில் உள்ளன. யுரேனிடே அந்துப்பூச்சிகள் ஜியோமெட்ர் அந்துப்பூச்சிகளைப் போன்றன. ஆனால் வேறுபட்ட இறக்கை நரம்புகள் இவற்றை வேறுபடுத்துகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Carter, David, Eyewitness Handbook to Butterflies and Moths (1992) pp. 190–191; Dorling Kindersley/New York, NY

மேலும் படிக்க[தொகு]

  • Minet, J. and Socble, M.J. (1999). The Drepanoid/Geometroid Assemblage. pp. 301–329 in Kristensen, N.P. (Ed.). Lepidoptera, Moths and Butterflies. Volume 1: Evolution, Systematics, and Biogeography. Handbuch der Zoologie. Eine Naturgeschichte der Stämme des Tierreiches / Handbook of Zoology. A Natural History of the phyla of the Animal Kingdom. Band / Volume IV Arthropoda: Insecta Teilband / Part 35: 491 pp. Walter de Gruyter, Berlin, New York.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரானிடே&oldid=3325460" இலிருந்து மீள்விக்கப்பட்டது