மெயின் கேம்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மெயின் கேம்ப்
மெயின் கேம்ப் முதல் பதிப்பு.jpg
மைன் கம்ப் புத்தகத்தின் - முதல் தொகுப்பு அட்டை (முதல் பதிப்பு)
நூலாசிரியர் (கள்) அடால்ப் இட்லர்
நாடு ஜெர்மனி
மொழி ஜெர்மன்
பாணி தன்சுயசரிதம், அரசியல் கோட்பாடு
பதிப்பாளர் செக்கர் மற்றும் வார்பர்க்
பதிப்புத் திகதி
ஊடக வகை அச்சு (அழுத்தமான அட்டை & பின்பக்கம்)
பக்கங்கள் 720 pp

மெயின் கேம்ப் இதன் ஜெர்மன் மொழி உச்சரிப்பு மைன் கம்ப் (mein kampf) எனது போராட்டம் மற்றும் எனது யுத்தம் என்ற பொருள்படும் தலைப்பில் தன்சுயசரிதை மற்றும் தேசிய பொதுவுடமைக் கட்சியின் கொள்கை விளக்கம் இரண்டையும் உள்ளடக்கி அடால்ப் இட்லர் எழுதிய புத்தகமே மெயின் கேம்ப். இது இரண்டு தொகுப்புகளாக வெளியிடப்பட்டது முதல் தொகுப்பு 1925 லும் இரண்டாம் தொகுப்பு 1926-ம் ஆண்டிலும் வெளியிடப்பட்டது. 1925 லிருந்து 1934 வரை இப்புத்தகத்தின் 2,40,000 பிரதிகள் விற்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரின் இறுதியில் இப்புத்தகம் விற்பனையான பிரதிகளின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியது. இப்புத்தகம் ஜெர்மன் இராணுவத்தினருக்கும் புதுமணதம்பதியர்க்கும் இலவசமாக வழங்கப்பட்டது. அப்போழுது இப்புத்தகம் எனது சண்டை என பொருள்பட்டதாக இப்புத்தகத்தின் பதிப்பாளர் குறிப்பிடுகிறார். இட்லர் ஏப்ரல் 1,1924 முனிக்கில் சிறைபிடிக்கப்பட்டபோது இட்லர் சிறையிலிருந்து எழுதிய புத்தகமே இது. டிசம்பர் 20,1924 ல் விடுதலை செய்யப்பட்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மெயின்_கேம்ப்&oldid=1471698" இருந்து மீள்விக்கப்பட்டது