மக்காலு
| மக்காலு | |
|---|---|
எவரெஸ்ட் மலையில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள மக்காலு |
|
| உயரம் | 8,462 மீட்டர் (27,762 அடி) |
| அமைவிடம் | நேபாளம்-சீனா (திபெத்து) |
| தொடர் | இமயமலை |
| சிறப்பு | 8,462 மீ உயரத்தில் 5ஆவது |
| ஆள்கூறுகள் | |
| முதல் ஏற்றம் | மே 15 1955 லியோனெல் டெர்ரே(Lionel Terray) and ழ்ஜான் கூசி(Jean Couzy) |
| சுலப வழி | நுரைபனி-பனிப்பாளம் ஏற்றம். |
மக்காலு (நேபாளத்தில் ஏற்புடைய பெயர் मकालु'; சீனாவில் ஏற்புடைய பெயர் மக்காரு:马卡鲁山; பின்யின்:மக்காலு ஷான் Mǎkǎlǔ Shān) உலகிலேயே ஐந்தாவது உயரமான மலை. இது இமய மலைத் தொடரில் எவரெஸ்ட் மலைக்கு கிழக்கே 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மக்காலு தனி முகடாக நாங்கு முகம் கொண்ட சதுரவடி கூம்புப் பட்டகம் போல் உள்ளது. மலையின் உச்சி கடல் மட்டத்தில் இருந்து 8,462 மீட்டர் ((27,762 அடி) உயரத்தில் உள்ளது. உயரமான பின்புல மலைப்பகுதியில் இருந்து இதன் தனி முகடு மட்டுமே 2,386 மீ (7,828 அடி) நிற்கின்றது.
மக்காலு மலையை ஒட்டி இரு துணை முகடுகள் உள்ளன. அவற்றுள் வடமேற்கே ஏறத்தாழ 3 கி.மீ தொலைவில் கங்ச்சுங்ஸ்ட்டே (Kangchungtse,) அல்லது மக்காலு-2 என்னும் மலைமுகடு உள்ளது. அதன் உயரம் 7,678 மீ (25,190 அடி). மக்காலு மலைக்கு 4 கி.மீ தொலைவில் மக்காலு-2 உடன் ஒட்டி இரண்டாவது துணை முகடு உள்ளது. இதன் பெயர் சோமோ லோன்சோ (Chomo Lonzo). இதன் உயரம் 7,818 மீ (25,650 அடி).
வெளி இணைப்புகள் [தொகு]
- மக்காலு பற்றி சம்மிட் போஸ்ட்டில் (SummitPost) (ஆங்கிலத்தில்)
- மக்காலு பற்றி பீக்வேரில் (Peakware) (ஆங்கிலத்தில்)
- பிரித்தானிய சேவை நிறுவனத்தின் 2004 ஆம் ஆண்டு மக்காலு ஏறுலா (The British Services Makalu Expedition 2004) (ஆங்கிலத்தில்)