போர்னிய கருப்பு மேக்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்னிய கருப்பு மேக்பை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கோர்விடே
பேரினம்:
இனம்:
பி. அடெரிமசு
இருசொற் பெயரீடு
பிளாட்டிசுமுரசு அடெரிமசு
லெசன், 1831
வேறு பெயர்கள்
  • பிளாட்டிசுமுரசு லுகோப்டெரசு ஏட்ரிமசு

போர்னிய கருப்பு மேக்பை (Bornean black magpie)(பிளாட்டிசுமுரசு அடெரிமசு), என்பது கருப்பு கொண்டை மேக்பை என்றும் அழைக்கப்படுகிறது. இது கோர்விடே குடும்பத்தில் உள்ள ஒரு வால் காகம் ஆகும். இது தென்கிழக்காசிய தீவான போர்னியோவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1]

வகைப்பாட்டியல்[தொகு]

போர்னிய கருப்பு மேக்பை முன்பு தனித்துவமான துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் சமீபத்திய திருத்தங்கள் இதை முழு சிற்றினமாக பிளாடிசுமுரசு அடெரிமசு என பிளாட்டிசுமுரசு பேரினத்தின் கீழ் வைக்கப்பட்டது.[2]

விளக்கம்[தொகு]

போர்னிய கருப்பு மேக்பை சுமார் 43 செ. மீ. நீளமுடையது. இது ஒரு நீண்ட, பரந்த மற்றும் வரிகளுடன் கூடிய வாலும், தடிமனான கருப்பு நிற அலகினையும், உயரமான, மிருதுவான முகட்டினையும், கருப்பு நிறக் கால்கள் மற்றும் பாதங்களுடன், சிவப்பு கருவிழிகளையும் கொண்டது. இதன் அனைத்து இறகுகளும் கருப்பு நிறமுடையது. இது பரிந்துரைக்கப்பட்ட துணையினங்களை விட உயரமான முகட்டினையும் வெண்ணிற இறக்கை திட்டு இன்றி காணப்படும்.[3]

நடத்தை[தொகு]

போர்னிய கருப்பு மேக்பை அடிக்கடி ஒலி எழுப்பும் கூட்டமாக வாழும் பறவையாகும். இது பெரும்பாலும் குடும்பமாக உணவினைத் தேடும். போர்னிய கருப்பு மேக்பை பலவிதமான விசில் மற்றும் அரட்டை அழைப்புகளைக் கொண்டுள்ளது. இது ஒரு தனித்துவமான குறைந்த துடிக்கும் ஹூ அல்லது பூபூபூ ஒலியை உருவாக்கும் .[3][1]

கூடு[தொகு]

செப்டம்பர் 1981-ல் டேபின் வனவிலங்கு காப்பகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கூட்டின் அளவானது சுமார் 20 செ. மீ. என விவரிக்கப்பட்டது. இக்கூடானது ஒரு சிறிய மரம் ஒன்றில் குச்சிகளால் சுமார் 8 மீ. உயரத்தில் கட்டப்பட்டிருந்தது.

உணவு[தொகு]

போர்னிய கருப்பு மேக்பை மரங்களில் வாழும் வாழ்க்கையினைக் கொண்டது. இது இலைகள், பூச்சிகள்,பழங்கள், சிறிய பாலூட்டிகள் மற்றும் ஊர்வனவற்றையும் உணவாக எடுத்துக்கொள்கிறது.[4]

பரவலும் வாழ்விடமும்[தொகு]

போர்னிய கருப்பு மேக்பை போர்னியோவின் தாழ்நிலங்களில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 300 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. இது திப்டெரோகார்ப், கெரங்காசு மற்றும் பீட் சதுப்பு காடு உள்ளிட்ட முதன்மை காடுகளில் வாழ்கிறது. மேலும் இது இரண்டாம் நிலை காடுகளிலும், அதிகமாக வளர்ந்த மரத்தோட்டங்கள் மற்றும் புதர்க்காடுகளிலும் காணப்படுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Phillipps, Quentin; Phillipps, Karen (2011). Phillipps' Field Guide to the Birds of Borneo. Oxford, UK: John Beaufoy Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-906780-56-2. 
  2. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-29.
  3. 3.0 3.1 "Black Magpie". HBW Alive. Lynx Editions. 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-11-16.
  4. 4.0 4.1 . 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்னிய_கருப்பு_மேக்பை&oldid=3741427" இலிருந்து மீள்விக்கப்பட்டது