பேச்சு:தமிழ்நாட்டினர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரையின் தலைப்பு ஏன் மாற்றப்பட்டது, ஏன் நீக்கல் வார்ப்புரு இடப்பட்டுள்ளது என அறியலாமா? விக்கிப்பீடியர் பற்றிய குறிப்பு இக்கட்டுரையில் தேவையற்றது.--இரவி (பேச்சு) 11:49, 5 செப்டம்பர் 2013 (UTC)

தமிழர் என்பதன் அளவீடு எது?[தொகு]

கருணாநிதி, ஜெயலலிதா போன்றோரெல்லாம் தமிழர்கள் இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேனே. தமிழர் என்பதன் அடிப்படை அளவு எதுவென அறிந்து கொள்ளலாமா? --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:17, 5 செப்டம்பர் 2013 (UTC)
நீங்கள் கூற வருவது விளங்கவில்லை. தமிழர் என்ற ஒரு இனக் குழு இல்லையா. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தம்மைத் தமிழராகக் கருதவில்லையா. தமிழ் பண்பாட்டுப் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள், தமிழ் பேசுபவர்கள், நெடுங்காலமாக தமிழ் புலத்தில் தமிழர்களோடு தமிழ் பேசி வாழ்பவர்கள் என்ற ஒரு பரந்த உள்வாங்கும் வரையறையைத் தமிழர் என்பவருக்குக் கொள்ளலாம். --Natkeeran (பேச்சு) 13:15, 5 செப்டம்பர் 2013 (UTC)
கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் போன்றோர்கள் தமிழர்கள் இல்லை என்றும், பிராமணர்கள் தமிழர்கள் இல்லையென்றும் முகநூல் பதிவொன்றில் படித்தேன். ஆரியர்கள் என்று பிராமணர்களை தமிழர்களிடமிருந்து பிரிக்கின்றவர்கள். பிறப்பின் அடிப்படையில் சாதித் தமிழர்கள் மட்டுமே தமிழர்கள் என்ற கூற்றை கூறுகின்றார்கள். இங்கு எவ்வகையான வரையரை உள்ளது என்பதை அறியவே கேட்டேன். பதிலளித்தமைக்கு நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:36, 5 செப்டம்பர் 2013 (UTC)

எவ்வளவு நீளத்துக்கு....?[தொகு]

தமிழ்நாட்டுத் தமிழர் பட்டியல் என்கிற பெயர் மாற்றத்திற்குப் பின்புதான் நீக்கல் வார்ப்புரு என்னால் இடப்பட்டது. நீக்கல் வார்ப்புரு இக்கட்டுரை குறித்த உரையாடலுக்காகவே இடப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் யாரையெல்லாம்...? என்னென்ன தலைப்புகளின் கீழ்...? எவ்வளவு நீளத்திற்குப் பட்டியலிடுவது? என்னைப் பொறுத்தவரை இப்படியொரு பட்டியலிடுவதாக இருந்தால் இங்கு இடம் பெற்றிருக்கும் உள் தலைப்புகள் ஒவ்வொன்றிலும் தனிக்கட்டுரையாகக் கொண்டு பட்டியலிடப்படுவதே சிறந்தது. இத்தலைப்பின் கீழ் தனிப்பட்டியல் தலைப்புகளை உள்ளடக்கமாகச் சேர்த்துக் கொள்ளலாம். இக்கட்டுரையைத் தொடங்கியவரே தனித்தனிக் கட்டுரைகளாகத் தொடங்கட்டும். விக்கிப்பீடியர் குறித்த பட்டியல் இங்கு தேவையற்றதே...!--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 13:02, 5 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரையைப் பழைய தலைப்புக்கு மாற்றி, விக்கியில் கட்டுரை உள்ளவர்களை மட்டும் பட்டியலிட வேண்டும். தற்போதுள்ள தலைப்பு விரிந்த தலைப்பாக உள்ளது. அனைத்து 60 கோடித் தமிழரையும் பட்டியலிட வேண்டுமா:). புகழ்பெற்ற தமிழ்நாட்டினர் எனத் தலைப்பிடலாம். யார் தமிழர் என்ற குழப்பம் நேராது.--Kanags \உரையாடுக 13:11, 5 செப்டம்பர் 2013 (UTC)
முதலாவதாக, தனிக் கட்டுரையாக பட்டியலிடப்படுவதே சிறந்தது எனில் நீக்கல் வார்ப்புரு இடத் தேவை இல்லை. பேச்சுப் பக்கத்தில் குறித்து இருக்கலாம். அப்படி தனித்தனிக் கட்டுரைகளாக அக் கட்டுரையைத் தொடங்கியவரே தொடங்க வேண்டிய அவசியமும் இல்லை. அது விக்கியின் பண்பு அன்று. தமிழ்நாட்டினர் என்று பெயர் மாற்றுவது பொருந்தாது. ஏன் எனில் இவ்வாறு பிற மாநிலங்களில், நாடுகளில் வாழும் தமிழர்களின் பட்டியல்களும் தொகுக்கப்படலாம். --Natkeeran (பேச்சு) 13:15, 5 செப்டம்பர் 2013 (UTC)
பெயர் தொடர்பாக: "புகழ்பெற்ற" என்று வருமிடத்து (பொதுவாக) சிலரை அங்கு சிலரைச் சேர்க்க முடியாது. எ.கா: ஆட்டோ சங்கர், வீரப்பன். இதனையும் பார்க்க: List of people from Tamil Nadu --Anton (பேச்சு) 13:24, 5 செப்டம்பர் 2013 (UTC)
அன்ரன் குறிப்பிடுபவர்களை அவர்கள் எவ்வாறு புகழ் பெற்றனரோ அந்த உபதலைப்பின் கீழ் பட்டியலிடலாம். குற்றவாளிகள், தீவிரவாதிகள் இவர்களும் புகழ் பெற்றவர்களே. ஆனாலும், விக்கியில் கட்டுரை இருப்பவர்களை மட்டும் பட்டியலிட வேண்டும். இக்கட்டுப்பாடு புதிதாகக் கட்டுரைகளை எழுதத் தூண்டும்.--Kanags \உரையாடுக 13:32, 5 செப்டம்பர் 2013 (UTC)

//முதலாவதாக, தனிக் கட்டுரையாக பட்டியலிடப்படுவதே சிறந்தது எனில் நீக்கல் வார்ப்புரு இடத் தேவை இல்லை. பேச்சுப் பக்கத்தில் குறித்து இருக்கலாம்.// முதலில் அப்படித்தான் நினைத்தேன். தலைப்பு மாற்றம்தான் எனக்கு அந்த வார்ப்புருவை இடச் செய்தது. (நீக்கம் செய்யும் எண்ணமிருந்தால் நானே நீக்கம் செய்திருக்க முடியுமே..! வார்ப்புருவை இடத் தேவையில்லையே...!)

//அப்படி தனித்தனிக் கட்டுரைகளாக அக் கட்டுரையைத் தொடங்கியவரே தொடங்க வேண்டிய அவசியமும் இல்லை. அது விக்கியின் பண்பு அன்று.// புதிதாகக் கட்டுரை எழுதி வருபவரின் ஆர்வத்தை நாம் குறைக்க வேண்டாமென்றுதான்...

//புகழ்பெற்ற தமிழ்நாட்டினர் எனத் தலைப்பிடலாம்// 👍 விருப்பம். ஆனால், உள் தலைப்புகள் தனித்தனித் தலைப்புகளில் தனிக்கட்டுரைகளாக இருப்பது சிறப்பு.

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:57, 5 செப்டம்பர் 2013 (UTC)

//நீக்கம் செய்யும் எண்ணமிருந்தால் நானே நீக்கம் செய்திருக்க முடியுமே..! வார்ப்புருவை இடத் தேவையில்லையே...!//

உரையாடலுக்கு இடமுள்ள இடங்களில், நீக்கல் வார்ப்புரு இடாமல் உரையாடலைத் தொடங்க முடியுமானால் அதுவே நன்று. ஏனெனில், புதிய பயனர்கள் இதைப் போன்ற வார்ப்புருக்களைக் கண்டு தாங்கள் என்ன தவறு செய்தோம் என்று குழம்புகிறார்கள். தொடர்ந்து இவ்வாறான குழப்பத்துக்கு உள்ளாகும் போது அவர்களின் பங்களிப்பு சுணங்கலாம்.--இரவி (பேச்சு) 18:02, 5 செப்டம்பர் 2013 (UTC)

//தயவுசெயது என்னால் துவக்கப்பட்ட இக்கட்டுரையை நீக்க வேண்டுகிறேன்// --கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 13.52, 6 செப்டம்பர் 2013 (UTC)

தலைப்பு மாற்றம்[தொகு]

கனக்ஸ் தெரிவித்த கருத்தின்படி புகழ்பெற்ற தமிழ்நாட்டினர் எனும் தலைப்புக்குக் கட்டுரை நகர்த்தப்பட்டுள்ளது. கட்டுரையைத் தொடங்கியவர் உள்ளடக்கத்தைத் தனிக்கட்டுரைகளாகப் பிரித்து எழுதுவதற்கு வாய்ப்பாக இக்கட்டுரையினுள் புகழ்பெற்ற தமிழ்நாட்டினர் துறைவாரியாகப் பிரித்துப் பட்டியலிடப்பட்டுள்ளது. கட்டுரையைத் தொடங்கியவர் புதியவர் என்பதால் அவருக்குப் புதிய தலைப்புகளில் கட்டுரைகளைத் தொடங்கிட புதிய தலைப்புகள் உள்ளிணைப்பு செய்யப்பட்டுள்ளது.நன்றி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 02:08, 6 செப்டம்பர் 2013 (UTC)

இத் தலைப்பு தேவையானால் முன்னைய தலைப்பில் வேறு ஒரு பட்டியல் தொடங்கவுள்ளேன். முன்னர் சுட்டியபடி பிற நாட்டு/இட தமிழர்களினது பட்டியல்களும் இவ்வாறு தொகுக்கப்படலாம். புகழ்பெற்ற என்ற அடைப்புமொழித் தேவை இல்லை. --Natkeeran (பேச்சு) 03:05, 6 செப்டம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழ்நாட்டினர்&oldid=1494464" இலிருந்து மீள்விக்கப்பட்டது