புறவன்கூடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு உயிரினத்தின் வெளியிலிருந்து அதற்கு ஆதரவும் பாதுகாப்பும் வழங்கும் வன்கூடே புறவன்கூடு. இவை பொதுவாக ஓடு எனப்படும். இவ்வகைக் வன்கூடானது பூச்சிகளிடமும் சிலவகை மொலஸ்கா வகை விலங்குகளிடமும் காணப்படும். பாதுகாப்பை வழங்குவது இதன் முக்கிய தொழிலாகும். பூச்சிகளின் புறவன்கூடு கைற்றினால் ஆக்கப்பட்டிருப்பதோடு நத்தையின் புறவன்கூடு கல்சியம் கார்பனேற்றால் ஆக்கப்பட்டிருக்கும்.