நத்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நத்தை
Grapevinesnail 01.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்குகள்
தொகுதி: மெல்லுடலி
வகுப்பு Gastropoda
Helix pomatia, ஒருவகை நில நத்தை.
Helix pomatia sealed in its shell with a calcareous epiphragm.
மானுசுத் தீவில் காணப்படும் மரகதப் பச்சை நத்தையின் ஓடுI

நத்தை மெல்லுடலிகளில் வயிற்றுக்காலிகள் வகுப்பைச் சேர்ந்த விலங்கினமாகும். இவற்றின் முதிர்விலங்குகளில் சுருளி வடிவிலமைந்த ஓடு காணப்படும். ஓட்டின் கீழாக தசைப்பாதம் காணப்படும். நத்தை என்பது பொதுவாக கடல் நத்தை, தரை நத்தை, நன்னீர் நத்தை என்பவற்றைக் குறிப்பிடப் பொதுவாகப் பயன்படும். ஓடிலாத நத்தை வகைகளும் காணப்படுகின்றன.

குளிர்கால உறக்கத்தில் இருக்கும் நத்தை
நத்தை ஓடு

Pulmonata வகையைச் சேர்ந்த நத்தைகள் நுரையீரல்களினால் சுவாசிக்கின்றன. அதேவேளை paraphyly வகையைச் சேர்ந்த நத்தைகள் பூக்களினால்(செவுள்களினால்) சுவாசிக்கின்றன.

மானுசுத் தீவில் காணப்படும் மரகதப் பச்சை நத்தை என்பது நத்தைகளில் பொதுவாகக் காணப்படாத பச்சை நிறத்தில் உள்ளது.

நத்தைகளினால் பயிர்சேதம்[தொகு]

நேரடி விதைப்பு நெல் வயல்களில் நெல் நாற்று தண்டு பகுதியை நத்தை வெட்டி சேதப்படுத்தும்.[1]

நத்தை உணவு[தொகு]

சிலர் நெல் வயல்களில் காணப்படும் நத்தைகளை சேகரித்து குழம்பாக சமைத்து உண்பார்கள்.[2]

பாப்பா பாட்டு[தொகு]

நத்தை யம்மா, நத்தை யம்மா, எங்கே போகிறாய்?
அத்தை குளிக்கத் தண்ணீர்க் குடம் கொண்டு போகிறேன்
எத்தனைநாள் ஆகும் அத்தை வீடு செல்லவே?
பத்தே நாள்தான்; வேணு மானால் பார்த்துக் கொண்டிரு.

மேலும் படிக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நத்தை&oldid=1472357" இருந்து மீள்விக்கப்பட்டது