பிரபாத சங்கீதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரபாத சங்கீதம் (Prabháta Saḿgiita ), ஒரு புதிய விடியலின் பாடல்கள் அல்லது பிரபாத்தின் பாடல்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இது பிரபாத் ரஞ்சன் சர்க்கார் என்பவர் இசையமைத்த பாடல்களின் தொகுப்பாகும்.[1] சர்க்கார் 1982 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு தான் இறக்கும் வரை எட்டு வருட காலப்பகுதியில் பாடல் வரிகள் மற்றும் மெல்லிசை உட்பட மொத்தம் 5,018 பாடல்களை இயற்றியுள்ளார். பெரும்பாலான பாடல்கள் வங்காள மொழியில் இருந்தாலும், சில இந்தி, ஆங்கிலம், சமசுகிருதம், உருது, மாகஹி, மைதிலி மற்றும் அங்கிகா ஆகிய மொழிகளிலும் உள்ளன. பிரபாத சங்கீதம் சில சமயங்களில் தாகூர் பானியிலான இசைப் பள்ளிக்குப் பிந்தையதாகக் கருதப்படுகிறது. பாடல் வரிகளின் கவிதை காதல், மாயவாதம், பக்தி, மனிதநேயம் மற்றும் புரட்சி ஆகியவற்றின் கூறுகளை வெளிப்படுத்துகிறது. மேலும், பாடல்கள் கிழக்கு மற்றும் மேற்கத்திய மெல்லிசை பாணிகளின் பரந்த நிறமாலையை வழங்குகின்றன.

சொற்பிறப்பியல்[தொகு]

வங்காள மொழியில், "பிரபாத்" என்றால் விடியல், காலை அல்லது விடியல் எனப் பொருள்.ref name="Subhas Sarkar" />[2] "சங்கீதம்" என்றால் பாடல் மற்றும் இசை என பொருள்படும்.[3] >[2][4] எனவே, "பிரபாத சங்கீதம்" என்பது சொற்பிறப்பு ரீதியாக "காலை பாடல்" [5] அல்லது "விடியலின் பாடல்கள்" என்று பொருள்படும். இது "புதிய விடியலின் பாடல்கள்" என்றும் விளக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சொற்பிறப்பியலுக்கு சம்பந்தமில்லாத இசையமைப்பாளரின் பெயரில் " பிரபாத் ரஞ்சன் சர்க்கார் பாடல்கள்" என்றும் குறிப்பிடப்படுகிறது .

எழுத்து, சேகரிப்பு மற்றும் வெளியீடுகள்[தொகு]

சர்க்கார் வங்காள மொழியில் 14 செப்டம்பர் 1982 [6] இல் இந்தியாவின் தேவ்கரில் முதல் பிரபாத சங்கீதமான பந்து ஹீ நியே காலோ என்ற பாடலை இயற்றினார்.[7] அவர் 21 அக்டோபர் 1990 இல் இறக்கும் வரை தொடர்ந்து பாடல்களை இயற்றினார்.[8] எட்டு ஆண்டுகளில், அவர் மொத்தம் 5,018 பிரபாத சங்கீதங்களை இயற்றினார். அதில் கிட்டத்தட்ட அனைத்தும் வங்காள மொழியில்[9][10][11] பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன.[9][12][13] கடைசி பிரபாத சங்கீதமான, அம்ரா காசே நோவா குருகுல், எனற பாடல் அவர் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு, 20 அக்டோபர் 1990 அன்று இயற்றப்பட்டது.[6]

ஆனந்த மார்கம்[தொகு]

சர்க்கார் 1955 இல் ஆனந்த மார்கம் அமைப்பை உருவாக்கினார். மேலும், 1973 இல் ஆனந்த மார்க வெளியீட்டு நிறுவனம் அவரது படைப்புகளை மொழிபெயர்த்து விநியோகிக்க ஆரம்பித்தது. ஆங்கிலம்/வங்காள மொழியில் பல பதிப்கள் 1993 இல் வெளியிடப்பட்டது. மேலும், ஆங்கிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு சிறிய தொகுதிகளும் வெளியாயின. மற்றொரு ஆனந்த மார்கா-இணைந்த குழுவான மறுமலர்ச்சி கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சங்கம் (RAWA), தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களின் பல நிகழ்ச்சிகளையும், பதிவுகளையும் நிதியுதவி செய்து நடத்தியது. இது போன்ற பாடல்களை ஆசார்யா தத்வவேதாநந்த அவதூதா, ஆசார்யா பிரியசிவானந்தா அவதூதா, மாதுரி சட்டோபாத்யாய், ஸ்ரீகண்டோ ஆச்சார்யா, அருந்ததி ஹோல்ம் சௌத்ரி, ராம்குமார் சட்டோபாத்யா, அஸ்வினி பைதே-தேஷ்பாண்டே கவிதா கிருஷ்ணமூர்த்தி இரசீத் கான் மனோஜ் குமார் போன்ற கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். டி சடோலிகர், ஹைமந்தி சுக்லா, அர்ச்சனா உடுப்பா, ஸ்ரீராதா பந்தோபாத்யாய், சாதனா சர்கம், சிரேயா கோசல் மற்றும் சோனு நிகம்[14] போன்றவர்கள் தங்களது மேடைகளில் பாடினர்

மேற்கோள்கள்[தொகு]

  1. Chatterjee, Gita. Bengal's Swadeshi Samgit. Published in Banerjee, Jayasri (ed.), The Music of Bengal. Baroda: Indian Musicological Society, 1987
  2. 2.0 2.1 "Friday Review Bangalore - Music for humanity". தி இந்து (Bangalore, India). 2008-03-21 இம் மூலத்தில் இருந்து 2008-03-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080325232506/http://www.hindu.com/fr/2008/03/21/stories/2008032151150300.htm. 
  3. Avadhuta, Acharya Divyachetananda (2009-06-19). "Friday Review Delhi - Songs of dawn". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2009-06-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090624103952/http://www.hindu.com/fr/2009/06/19/stories/2009061950100300.htm. 
  4. "Prabhat Samgiita Divas celebrated". தி இந்து (New Delhi). 2009-09-15 இம் மூலத்தில் இருந்து 2011-09-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110918010346/http://www.hindu.com/2009/09/15/stories/2009091557350400.htm. 
  5. "Music and memories". தி இந்து. 2007-06-15 இம் மூலத்தில் இருந்து 2013-04-11 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130411022104/http://www.hindu.com/fr/2007/06/15/stories/2007061550170300.htm. 
  6. 6.0 6.1 Sarkár, Shrii Prabhát Raiṋjan (2003-04-30) (in bn). Prabhát Sauṋgiit (Tenth Volume) (Second ). Kolkata, India: Ananda Marga Publications. பக். xxviii. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7252-214-2. 
  7. "Homage to spiritual guru". Calcutta, India: The Telegraph (Calcutta). 2004-09-20 இம் மூலத்தில் இருந்து October 12, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131012040057/http://www.telegraphindia.com/1040920/asp/jamshedpur/story_3778537.asp. 
  8. Ghista, Garda (2006-11-30). The Gujarat Genocide: A Case Study in Fundamentalist Cleansing. Italy: AuthorHouse. பக். 174. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781425944537. https://books.google.com/books?id=T-CazvdstPcC&pg=PA174. 
  9. 9.0 9.1 "Top cultural icon feted". Afternoon. 7 June 2011. http://www.afternoondc.in/film-review/top-cultural-icon-feted/article_26683. 
  10. "Driven by devotion - Meena Banerjee was mesmerised by a few pleasant surprises". The Statesman. October 7, 2011 இம் மூலத்தில் இருந்து 2013-04-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130413204936/http://www.thestatesman.net/index.php?option=com_content&view=article&show=archive&id=385734&catid=47&year=2011&month=10&day=7. 
  11. Jha, Ujjawala (2011-11-20). "Shri Shri Anandamurti: A 20th Century Indian Philosopher". Pune, இந்தியா: Centre of Advanced Study in Sanskrit, University of Pune. p. 2. பார்க்கப்பட்ட நாள் 1 February 2013.
  12. "Driven by devotion - Meena Banerjee was mesmerised by a few pleasant surprises". The Statesman. October 7, 2011. http://www.thestatesman.net/index.php?option=com_content&view=article&show=archive&id=385734&catid=47&year=2011&month=10&day=7. 
  13. Jha, Ujjawala (2011-11-20). "Shri Shri Anandamurti: A 20th Century Indian Philosopher". Pune, இந்தியா: Centre of Advanced Study in Sanskrit, University of Pune. p. 2. பார்க்கப்பட்ட நாள் 1 February 2013.
  14. 70 Questions and Answers on Prabhat Samgiita by Ac. Shambhushivananda Avt., stories on Prabhat Samgiita.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபாத_சங்கீதம்&oldid=3760342" இலிருந்து மீள்விக்கப்பட்டது