பாட்டுப் புத்தகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாட்டுப் புத்தகம் (Song book) என்பது பாடல் வரிகளைக் கொண்ட புத்தகம் ஆகும். பாட்டுப் புத்தகங்கள் எளிமையான பயிற்சிப் புத்தகங்களாகவோ அல்லது சுழல்-பிணைப்பு குறிப்பேடுகளாகவோ இருக்கலாம். இசை வெளியீட்டாளர்கள் குழு பாடலுக்கான அச்சிடப்பட்ட பதிப்புகளையும் தயாரித்தனர். [1] [2] இத்தகைய தொகுதிகளை அமெரிக்காவில் கின்னரப்பெட்டி தயாரிப்பாளர்களால் சந்தைப்படுத்தல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டன. [3]

சமய இசையை உள்ளடக்கிய பாடல் புத்தகங்கள் பெரும்பாலும் பாசுர ஏடு என்று அழைக்கப்படுகின்றன; சொற்கள் இல்லாத பாடல்களுக்கான இசையைக் கொண்ட புத்தகங்கள் சில சமயங்களில் மெட்டுப் புத்தகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. [4]

திரைப்பட பாடல் புத்தகம்[தொகு]

தமிழ்நாட்டில் திரைப்படப் பாடல்களை பாட்டுப் புத்தகமாக வெளியிடும் பழக்கம் ஓரிரு தசாப்தங்கள் வரை இருந்தது. துவக்கத்தில் இந்தப் பாட்டுப் புத்தகங்களை படத் தயாரிப்பு நிறுவனங்களே வெளியிட்டன. பாட்டுப் புத்தகத்தில் படத்தை உருவாக்கியவர்களின் பட்டியல், கதைச் சுருக்கம், பாடல் வரிகள் போன்றவை மட்டுமல்லாமல் கிராமபோன் தட்டுக்கள் போன்றவற்றின் விளம்பரங்களும் இடம்பெற்றன. தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் வெளியான காலத்தில் இருந்தே திரைப்பட பாட்டுப் புத்தகங்கள் விற்பனை செய்யபட்டன. சில திரைப்பட ஒலிப்பேழை நிறுவனங்களே ஒரு படத்தின் பாடல் (எ.கா. திருடா திருடா) ஒலிப்பேழைக்குள்ளே பாட்டு வரிகள் அடங்கிய கையடக்க ஏட்டையும் சேர்த்து வெளியிடுவதும் உண்டு.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Beattie, John (1941). The Gray Book of Favorite Songs (Enlarged ). Chicago, IL: Hall & McCreary. OCLC: 11729190. 
  2. Dann, Hollis (1919). Twice 55 Plus Community Songs : The New Brown Book. Boston, Ma: C. C. Birchard Co.. OCLC: 2343182. 
  3. The One Hundred and One Best Songs, The Cable Company, Piano Makers, Chicago, IL. 1912
  4. Eskew, Harry (1970), "Using Early American Hymnals and Tunebooks", Notes, p. 19, JSTOR 896750, ...in early America there were two books: the hymnal, typically with words only, and the tunebook, usually with tunes printed in open staves and frequently with only single stanzas of text. ... The hymnal was produced primarily for church use, whereas the tunebook was produced for a greater variety of uses ... . {{citation}}: Missing or empty |url= (help)
  5. "தமிழ் சினிமாவும் பாட்டுப் புத்தகங்களும், தினமலர், 2. சூன். 2010, சு. தியடோர் பாஸ்கரன் url=https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=531&cat=21". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help); Missing pipe in: |title= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டுப்_புத்தகம்&oldid=3849422" இலிருந்து மீள்விக்கப்பட்டது