கின்னரப்பெட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கின்னரப்பெட்டி அல்லது பியானோ (piano) என்பது விசைப்பலகை அடிப்படையில் அமைந்த ஓர் இசைக்கருவி. பொதுவாக ஒரு நவீன கின்னரப்பெட்டியில் 88 விசைகள் உள்ளன. கின்னரப்பெட்டியில் தனிநபர் இசை அல்லது குழு இசை வாசிக்கப்படுகிறது.
கின்னரப்பெட்டியின் நடுப்புறத்தில் மேற்கொள்ளாக அமைந்த விசை "நடு C விசை" (Middle C Key) என அழைக்கப்படுகிறது. ஒரு பாடலின் இன்னிசை (melody) பொதுவாக நடு C யின் வலது விசைகளில் வாசிக்கப்படுகிறது. ஒரு பாடலின் ஒத்திசை (harmony) பொதுவாக நடு Cயின் இடது விசைகளில் வாசிக்கப்படுகிறது.
கின்னரப்பெட்டி முதன் முதலில் இத்தாலியில் தோன்றியது. Piano என்கிற ஆங்கில சொல் இத்தாலிய மொழியிலிருந்து வந்தது. ஒரு கின்னரப்பெட்டியில் பல நரம்புகள் அமைந்துள்ளன. இவை ஒரு ஒரு சுற்றிலால் அடிக்கப்பட்டு பல சுரங்களில் ஒலியை எழுப்புகின்றன.
[தொகு] வரலாறு
கின்னரப்பெட்டி முதன்முதலில் 1700-ல் கிறிஸ்திஃபோரி (Cristifori) என்கிற இத்தாலிய இசைக்கருவிக்காப்பாளால் கட்டப்பட்டது. இவர் வடிவமைப்பில் இசைக்கருவியின் நரம்புகள் சுத்தியல்களால் அடிக்கப்பட்டு விடப்பட்டன. இதன் கட்டமைப்பை பற்றி மாஃபெய் (Maffei) என்கிற இத்தாலிய எழுத்தாளர் ஒரு விளக்கமான கட்டுரை 1711-ல் எழுதினார். இந்த கட்டுரையை படித்து ஸில்பெர்மேன் என்பவர் ஒரு மேம்படுத்தப்பட்ட இசைக்கருவியை கட்டினார். இதின் சிறப்பம்சம் அடியில் உள்ள தேய்மான மிதி (damper pedal). இதன் பின்னர் கின்னரப்பெட்டியின் தயாரிப்பு 18ஆம் நூற்றாண்டில் வியன்னாவில் மலர்ச்சி பெற்றது.
1790 இலிருந்து 1860க்குள் கின்னரப்பெட்டியின் நரம்புகளின் தரம் மிகவும் உயர்ந்தது. நரம்புகள் எஃகினால் கட்டப்பட்டது. கின்னரப்பெட்டியில் உள்ள இரும்புச் சட்டங்கள் துல்லியமாக வார்ப்படமிடப்பட்டது. ஒலிநீடிப்பும் மேம்படுத்தப்பட்டது. 1821இல் எரார்டு (Érard) இரட்டை விடுவிப்பு முறையை (double escapement) படைத்தார். இதனால் ஒரு சுரத்தின் மறுவிசைவு மற்றும் வாசிக்கும் வேகம் அதிகப்பட்டது. 1820க்குள் ஒரு கின்னரப்பெட்டியில் 7 எண்மசுரங்கள் அடைக்கப்பட்டன.

