எஃகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உருக்கு (உலோகம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எஃகுக் கம்பி

எஃகு அல்லது உருக்கு (steel) என்பது இரும்பை முக்கிய பாகமாகக் கொண்ட ஒரு கலப்புலோகமாகும். இதில் இரும்புடன் சிறிதளவு கரிமமும் (0.2% முதல் 2.1% எடையில்) கலந்திருக்கும். கரிமத்தின் அளவைப் பொறுத்து இதன் தரம் மாறுபடும். பொதுவாக இதில் கரிமம் கலக்கப்படுகிறது, எனினும் மாங்கனீசு, நிக்கல்], வனேடியம் போன்ற கனிமங்களும் கலக்கப்படுகின்றன. எஃகின் தரம், வலு, நெகிழ்வுத்தன்மை, இழுவு தன்மை ஆகியவை இதனுடன் சேர்க்கப்படும் உலோகத்தைப் பொறுத்து மாறுபடும். இதனுடன் சேர்க்கப்படும் கரிமத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க இதன் வலு அதிகமாகும், ஆனால் நெகிழ்வுத்தன்மை குறையும்.

பொருளடக்கம்

கரிம எஃகு [தொகு]

கரிம உருக்கே பரவலாகப் பயன்படுகின்ற கலப்புலோகமாயினும், அவற்றின் சிறப்பியல்புகளுக்காகப் பயன்படுத்தப்படும் கலப்புலோகங்கள் பல உள்ளன. ஒரு பழைய வரைவிலக்கணத்தின்படி, எஃகு என்பது 2.1% வரை கரிமத்தைக் கொண்ட கலப்புலோகமாகும். தற்காலத்தில், கரிமம் ஒரு விரும்பப்படாத கலப்புலோகக் கூறாகக் கருதப்படும் சிலவகையான உருக்குகளும் உண்டு. ஓர் அண்மைய வரைவிலக்கணம், உருக்கு என்பது plastic ally வார்க்கக்கூடிய ஒரு இரும்பை அடிப்படையாகக் கொண்ட கலப்புலோகம் என்கிறது. உருக்கில் கரிமத்தின் முக்கியத்துவம், உருக்கின் இயல்புகளிலும், அதன் நிலை மாற்றத்திலும், காபன் கொண்டிருக்கும் தாக்கத்தின் விளைவுகளினாலேயே உருவாகிறது. காபனின் அளவு அதிகரிக்க, உருக்கின் கடினத்தன்மையும், இழுவைப் பலமும் அதிகரிக்கின்றது. ஆனாலும் அதன் நொருங்கக்கூடிய தன்மையும் அதிகரிக்கவே செய்கிறது.

பண்புகள்: [தொகு]

இரும்பு-கரிமம் பிரிவு வரைபடம்

.

எஃகின் அடர்த்தி இதன் உலோகக் கலப்பைப் பொறுத்து மாறுபடும், ஆனால் பொதுவாக 7.75 முதல் 8.05 g/cm3 அடர்த்திக்குள் இருக்கும். எஃகின் தன்மையின் காரணமாக இது பெரும்பான்மையான உபயோகங்களுக்கு பயன் படுகிறது. அறை வெப்பநிலையில் body-centered cubic (BCC) நிலைகள் இருக்கும். எஃகு காந்தத்தன்மை கொண்டது.

பயன்கள் [தொகு]

இயந்திரவியலில் இது அதிகம் பயன் படுகிறது. இது ஆட்டோமொபைல் துறையில் அதிகம் பயன்படுகிறது.

கட்டுமானத்துறையில் [தொகு]

தற்காலக் கட்டுமானத்துறையிலே உருக்கு மிக முக்கியமான பங்கை வகிக்கின்றது. தூண்கள், உத்தரங்கள், கூரைச் சட்டகங்கள், தள அமைப்புகள், கூரைத் தகடுகள் மற்றும் பலவகையான அமைப்பு சம்பந்தப்பட்ட மற்றும் அலங்காரத்துக்கான கட்டிடக் கூறுகள் உருக்கினால் ஆக்கப்படுகின்றன. இவற்றைவிட வலிதாக்கப்பட்ட காங்கிறீற்று அமைப்புக்களில் பெருமளவு உருக்கு, கம்பிகள் வடிவில் பயன்படுத்தப்படுகின்றது.


இந்தியாவின் எஃகு உற்பத்தியாளர்கள்: [தொகு]

  • டாட்டா எஃகு ஆலை
  • எஸ்ஸார் எஃகு ஆலை
  • இஸ்பாத் எஃகு ஆலை
  • ஜிண்டால் எஃகு ஆலை

"http://ta.wikipedia.org/w/index.php?title=எஃகு&oldid=1357811" இருந்து மீள்விக்கப்பட்டது