புளூஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புளூஸ் (Blues) என்பது குரலும், இசைக்கருவிகளும் இணைந்த ஒருவகை இசை வடிவம் ஆகும். இது, ஐக்கிய அமெரிக்காவின் ஆபிரிக்க அமெரிக்கச் சமூகத்தினரின் வெளிப்பாடாக, ஆன்மீகப் பாடல்கள், பணியிடப் பாடல்கள் போன்றவற்றிலிருந்து தோற்றம்பெற்றது. இவ்விசை வடிவத்தின் இயல்புகள் இதில் ஆபிரிக்கச் செல்வாக்கு இருப்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

பிற்கால அமெரிக்காவினதும், மேற்குலகினதும் மக்கள் இசைமீது "புளூஸ்" இசையின் தாக்கம் உள்ளது. இது, ஜாஸ், ரிதம் அண்ட் புளூஸ், ராக் அண்ட் ரோல் போன்ற இசை வடிவங்களுக்கு அடிப்படையாக அமைந்தது. 1960களிலும், 1970களிலும், புளூஸிசைவடிவத்துடன் பல்வேறு வகையான ராக் அண்ட் ரோல் வடிவங்கள் சேர்ந்துபுளூஸ் ராக் (blues rock) எனப்படும் கலப்பிசை வடிவம் ஒன்றும் வளர்ச்சியடைந்தது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=புளூஸ்&oldid=1351992" இருந்து மீள்விக்கப்பட்டது