பல்லடம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல்லடம் வட்டம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். [1]இந்த வட்டத்தின் தலைமையகமாக பல்லடம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 4 உள்வட்டங்களும், 29 வருவாய் கிராமங்களும் உள்ளது. [2]

பல்லடம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 245,522 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 123,576 ஆண்களும், 121,946 பெண்களும் உள்ளனர். 70,223 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 56.8% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 76.74% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 25170 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 45,108 மற்றும் 114 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 92.94%, இசுலாமியர்கள் 2.91%, கிறித்தவர்கள் 4.01% மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருப்பூர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
  2. பல்லடம் வட்ட வருவாய் கிராமங்கள்
  3. "பல்லடம் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2019-05-04. பார்க்கப்பட்ட நாள் 2019-05-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லடம்_வட்டம்&oldid=3700526" இலிருந்து மீள்விக்கப்பட்டது