சின்னக்கம்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்னக்கம்பாளையம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் தாராபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

11,546 (2011)

357/km2 (925/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 32.30 சதுர கிலோமீட்டர்கள் (12.47 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/chinnakkampalayam

சின்னக்கம்பாளையம் (ஆங்கிலம்:Chinnakkampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

தாராபுரம் - உடுமலைப்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் சின்னக்கம்பாளையம் பேரூராட்சி உள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து திருப்பூர் 63 கிமீ தொலைவில் உள்ளது. இதன் மேற்கில் 24 கி.மீ. தூரத்தில் உடுமலைப்பேட்டை நகரமும், கிழக்கில் 8 கி.மீ. தூரத்தில் தாராபுரம் நகரமும், வடக்கில் 24 கி.மீ. தூரத்தில் குண்டடமும் , தெற்கில் 35 கி.மீ. தூரத்தில் பழனி நகரமும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

32.30 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 58 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,445 வீடுகளும், 11,546 மக்கள்தொகையும் கொண்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. பேரூராட்சியின் இணையதளம்
  4. Chinnakkampalayam Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னக்கம்பாளையம்&oldid=3031941" இலிருந்து மீள்விக்கப்பட்டது