கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமுருகன்பூண்டி (ஆங்கிலம்:Thirumuruganpoondi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,459 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். திருமுருகன்பூண்டி மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும். சங்கரமநல்லூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
திருமுருகநாதஸ்வாமி திருக்கோவில் [தொகு]
- இங்கு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகிய திருமுருகநாதஸ்வாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
- கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர் அரிய பரிகாரத்தலமாக இது விளங்குகிறது. சித்தபிரமை, பில்லி, சூன்யம் இவை நீங்க வேண்டுவோர் இங்கு வந்து தங்கியிருந்து நீராடி வழிபடுவர்.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
வெளி இணைப்புகள் [தொகு]