பயனர் பேச்சு:Nagulan
வாருங்கள், Nagulan!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--Kanags \பேச்சு 22:57, 24 மே 2008 (UTC)
நகுலன், வணக்கம். தமிழ் விக்கிபீடியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் சார்லஸ் பிராட்லா பற்றி எழுதிய கட்டுரையை சார்லஸ் பிராட்லா என்ற தலைப்புக்கு மாற்றியுள்ளேன். இது விக்கிப்பீடியா (கலைக்களஞ்சிய) நடைக்கு ஏற்றவாறு மாற்றி எழுதப்பட வேண்டும். இவரைப் பற்றிய ஆங்கில விக்கியில் எழுதப்பட்டிருக்கும் முறையைக் கவனியுங்கள்: en:Charles Bradlaugh. ஏதேனும் உதவி தேவையென்றால் தயங்காமல் கேளுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 22:57, 24 மே 2008 (UTC)
நகுலன், தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்கிறேன். நீங்கள் மிகவும் பயனுடைய தலைப்புகளில் விரிவாக 3 கட்டுரைகள் இதுவரை இட்டுள்ளீர்கள். மேலே கனகு கூறியவாறு அவற்றை விக்கிப்பீடியாவுக்கு ஏற்றவாறு திருத்தி எழுதுதல் வேண்டும். இங்குள்ளவர்கள் கட்டாயம் திருத்தம் செய்ய உதவுவார்கள். அதே நேரத்தில், நீங்களும், எப்படி எழுதினால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உகந்ததாக இருக்கும் என்று எண்ணி திருத்தம் செய்ய வேண்டுகிறேன். ஆங்கில, மற்றும் பிற மொழி விக்கிகளிலும், இங்கே தமிழ் விக்கியிலும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ் விக்கியில் சமூகவலைவாசல் என்னும் பகுதியில் நடைக் கையேடுகள் உள்ளன. வாழ்க்கை வரலாறு எழுதவும் கையேடு அங்குள்ளது. அருள் கூர்ந்து தொடர்ந்து பங்களித்து ஆக்கம் தாருங்கள். உங்கள் படைப்புகள் மிக அருமையானவை. மிகவும் முக்கியமானவை. நன்றி. --செல்வா 14:31, 25 மே 2008 (UTC)
[தொகு] சே குவேரா
நகுலன், ஏற்கனவே சே குவேரா என்று ஒரு கட்டுரை உள்ளது. நீங்கல் இட்ட கட்டுரையை, அதனுடன் தக்கவாறு இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். --செல்வா 14:38, 25 மே 2008 (UTC)
[தொகு] கூகுள் ஆல்ஃபா மொழிபெயர்ப்பு
வணக்கம் நகுலன்,
கூகுள் ஆல்ஃபா கருவி செம்மப்படாத ஒன்று. அதில் கிடைக்கும் மொழிமாற்றத்தில் இலக்கணப் பிழைகளும் தகவல் பிழைகளும் மலிந்து காணப்படுகின்றன. இதனால், அதனைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் கட்டுரைகள் உள்ளடக்கங்களை ஏற்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம். எனவே நீங்கள் ஜெர்மன் குடியரசில் இணைத்த வற்றை மீளமைக்கிறேன். அருள் கூர்ந்து அக்கருவியைப் விக்கிப்பீடியாவில் பயன்படுத்த வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 18:09, 1 சூலை 2011 (UTC)
[தொகு] உங்களுக்குத் தெரியுமா திட்டம்
| நீங்கள் பங்களித்த தமிழ் மணி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூலை 20, 2011 அன்று வெளியானது. |