பயனர் பேச்சு:Editorgowtham24

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Editorgowtham24, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சிவகோசரன் (பேச்சு) 21:09, 5 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

--கு. அருளரசன் (பேச்சு) 00:17, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

எனது மொழிபெயர்ப்பு தானியக்கி மொழிபெயர்ப்பைக்கொண்டிருக்கவில்லை. கூகிள் மொழிபெயர்ப்பு போன்ற எந்தவித சேவைகளும் பயன்படுத்தப்படவில்லை. Editorgowtham24 (பேச்சு) 10:45, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

April 2024[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 15:45, 10 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

Information icon வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு தங்களை வரவேற்கிறோம் உங்களது பங்களிப்புகளுக்கு நன்றிகள். உங்களது தொகுக்கும் பாங்கு நீங்கள் விக்கிப்பீடியாவில் பல பயனர் கணக்குகளை வைத்துள்ளீர்கள் அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறீர்கள் எனத் தெரிகிறது. பல பயனர் கணக்குகளை வைத்திருப்பது இங்கு பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. மேலும், அவ்வாறு பல பயனர் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தடை செய்யப்படலாம். எனவே நீங்கள் பல பயனர் கணக்குகளை வைத்திருந்தாலோ அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டாலோ அதனை நிறுத்திக்கொள்ளவும். நன்றி AntanO (பேச்சு) 15:46, 10 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

நான் ஒரே ஒரு பயனர் கணக்கை மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். முடக்கப்பட்ட பயனர் கணக்குகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மேலும், ஏற்கனவே முடக்கப்பட்ட கணக்கை வைத்திருப்பவர் எவரும் புதிய கணக்கில் தான் வர வேண்டும். அப்படி ஒரு சூழலை ஏற்படுத்தியதே நீங்களும் உங்கள் குழுவும் தான்.
நான் பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக கனவு கண்டால், விழித்தெழ வேண்டியது நீங்கள் தான். நான் அல்ல. மேலும் ஒரே பயனர் கணக்கில் எழுத இயலா வண்ணம் சில மதி கெட்ட மனிதர்கள் ஆதிக்க மனோபாவத்துடன் செயல்பட்டது, அவரவர் விருப்பத்திற்கு பயனர் கணக்குகளை தூக்குவது, பெயருக்கு ஒரு காரணத்தை சொல்லி கட்டுரையை நீக்குவது எல்லாம் இங்கெ சகஜமான ஒன்றாகிவிட்டது. ஆனால், அவர்களையெல்லாம் இந்த குழுமம் ஒன்றும் செய்யாது போலவே. அதை நீங்களும் கண்டுகொள்ளப்போவதில்லை. எந்தக்காரணமும் குறிப்பிடாமல் எனது கட்டுரை என்பதற்காகவே ”சில்ரன் ஆஃப் ஹெவன்” கட்டுரையை நீக்கியவர் தானே நீங்கள். Editorgowtham24 (பேச்சு) 17:04, 10 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

வணக்கம், Editorgowtham24!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 15:46, 10 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Editorgowtham24&oldid=3933062" இலிருந்து மீள்விக்கப்பட்டது