பத்மாவதி ஆனையப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பத்மாவதி ஆனையப்பன், தமிழ்நாடு மாநிலம், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், வெள்ளங்குளி (அஞ்சல் குறியீட்டு எண்: 627426) கிராமத்தில் இவர் பிறந்தார். வெள்ளாங்குளி கிராமம் அம்பாசமுத்திரத்துக்கும் சேரன்மகாதேவிக்கும் இடையே அமைந்துள்ளது.[1]

கல்வி[தொகு]

இவர் தனது பள்ளிப் படிப்பை திலகர் வித்யாலயா, கல்லிடைக்குறிச்சியில் முடித்தார். இதனை அடுத்து தனது இளங்கலை [தமிழ்]] இலக்கியம் படிப்பை திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள சாரா டக்கர் கல்லூரியில் முடித்த பின்னர், அதே கல்லூரியில் தொடர்ந்து படித்து, 1973 ஆம் ஆண்டில் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டமும் பெற்றார். தொடர்ந்து தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நடத்திய கல்வெட்டு மற்றும் தொல்லியல் படிப்பில் சேர்ந்து ஓராண்டு படித்து 1975 ஆம் ஆண்டில் முதுகலை பட்டயம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக் கல்வியினை மேற்கொண்டு 1994 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார்.[1]

‘‘எனக்கு கல்வெட்டியல் பற்றி எல்லாம் முதலில் தெரியாது. எம்.ஏ முடித்ததும் தமிழ் தொடர்புடையை ஒரு துறையில், மேற்படிப்பைப் படிக்கலாம் என்று இருந்தேன். அந்த நேரத்தில்தான் கல்வெட்டியல் பற்றிய ஒரு டிப்ளோமா படிப்பு முதுகலைக்குப் பிறகு இருப்பதைக் குறித்த சென்னைப் பல்கலைக் கழகத்தின் விளம்பரத்தைப் பார்த்தேன். சென்னை எழும்பூரில் இருந்த அரசு தொல்லியல் துறையில் இந்த படிப்பு சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்தது. இந்தப் படிப்புக்கு தமிழ், சமஸ்கிருதம், வரலாறு, அகழ்வாராய்ச்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இருந்தது. அதில் சேர்ந்து படித்தபோதுதான் இந்தத் துறை பற்றிய ஆர்வம் எனக்கு மிகுந்தது.".என்று பத்மாவதி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.[1]

தொல்லியல் துறையில் ஆய்வுப் பணிகள்[தொகு]

1975 ஆம் ஆண்டு பட்டயப்படிப்பை முடித்த இவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் கல்வெட்டு மற்றும் தொல்லியல் அலுவலராக பணி நியமனம் பெற்றார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்வெட்டுகளைப் படியெடுப்பதற்காக, இவருடன் சேர்த்து, மூன்று பெண் அலுவலர்கள், கிராமங்களில் வாடகை சைக்கள்களை அமர்த்திக்கொண்டு ஊர் ஊராகச் சென்று கோவில்களில் உள்ள கல்வெட்டுகளைப் படியெடுத்த அனுபவங்களை இவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறாக கல்வெட்டுகளைப் படியெடுத்து, படித்து, குறிப்புகளுடன் இவர் தொகுத்த 22 கல்வெட்டுத் தொகுப்புகளை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது.[1]

இதழியல் கட்டுரைகள்[தொகு]

ஆராய்ச்சி, சமூக விஞ்ஞானம் போன்ற பல ஆய்விதழ்களில் பல, மெய்யியல், வரலாற்று ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இயற்றிய நூல்கள்[தொகு]

இவர் கீழ்க்கண்ட நூல்களை இயற்றியுள்ளார்[2] [3]:

நூல்கள்:[தொகு]

  1. சோழர் ஆட்சியில் அரசும் மதமும்
  2. சைவத்தின் தோற்றம்
  3. சோழர்கால சமயம்
  4. அம்பாசமுத்திரம்
  5. கல்வெட்டில் இசைக்குறிப்புகள்
  6. களப்பிரர் வரலாறு

ஆசிரியர்:[தொகு]

  1. நன்னிலம் கல்வெட்டுகள் தொகுதி – I
  2. நன்னிலம் கல்வெட்டுகள் தொகுதி – II
  3. நன்னிலம் கல்வெட்டுகள் தொகுதி – III
  4. திருவிழிமிழலை கல்வெட்டுகள்
  5. திருவலஞ்சுழி கல்வெட்டுகள்
  6. தாமரைப் பாக்கம் கல்வெட்டுகள்

துணை ஆசிரியர்:[தொகு]

  1. தொல்லியல் கருத்தரங்கம் தொகுதி–1
  2. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 2004
  3. காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்
  4. தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள்
  5. திருவாரூர் மாவட்டக் கல்வெட்டுகள்

பணி ஓய்வு[தொகு]

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையிலிருந்து தனது 58 ஆவது வயதில் பணி ஒய்வு பெற்றார். எனினும் "தொல்லியல் பணிகளில் இருந்தோ அல்லது தொல்லியல் ஆய்வுகளிலிருந்தோ ஒய்வு பெற்றதாக இவருடைய செயல்பாடுகள் இல்லை. பணி ஓய்விற்குப் பிறகு “தொல்லியல் துறை வளர்ச்சியிலும், வரலாற்று ஆய்வுகளிலும், வரலாற்றுக் கல்வியிலும், தொல்லியல் துறையில் இளையதலைமுறையினரை உருவாக்குவதிலும் ஆர்வம் கொண்டு தொடர்ந்து” உழைத்து வருகிறார்.[2]

பயிலரங்குகள்[தொகு]

  1. தொல்லியல் மற்றும் கல்வெட்டு (கிரந்தம்) குறித்த பயிலரங்குகள்[2]:
  2. சரஸ்வதி மஹால் நூல் நிலையம், தஞ்சாவூர் - பல்லவர் கல்வெட்டுக்களில் கிரந்தம் வகுப்பு மற்றும் தஞ்சைப் பெரிய கோவிலில் கல்வெட்டு வாசிப்புக் களப்பயிற்சி.[2]
  3. தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கல்லூரி, நாமக்கல்: மாணவர்களுக்கு கிரந்த எழுத்துக்கள் பயிற்சி [2]
  4. காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம், ,காந்திகிராமம்: “தொண்டைமண்டல வரலாறு” சொற்பொழிவு [2]
  5. சென்னை சமூக ஆய்வுவட்டம், பனுவல், சென்னை: “களப்பிரர் வீழ்ச்சியும் பல்லவர் எழுச்சியும்” சொற்பொழிவு [2]
  6. தமிழக மூதறிஞர்கள் குழு. மாதாந்திர கலந்துரையாடல், ஜூலை 2015. “தமிழக வரலாற்றில் கல்வெட்டுகள் கூறும் முக்கியச செய்திகள்” சொற்பொழிவு [2]
  7. “பனுவல் புத்தக நிலையம்” நடத்தும் ஒருநாள் வரலாற்றுத் தொல்லியல் கல்விப் பயணத்தில் (Archeological Tour ) கலந்துகொண்டு வரலாறு மற்றும் தொல்லியல் கல்வி பயிற்சி அளித்தல். இதுவரை: (1) மகாபலிபுரம், (2) காஞ்சிபுரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், (3) செஞ்சி ஆகிய பகுதிகளுக்கு மேற்கொண்ட ஒருநாள் வரலாற்றுத் தொல்லியல் கல்விப் பயணத்தை வழிநடத்தியுள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மாவதி_ஆனையப்பன்&oldid=3775055" இலிருந்து மீள்விக்கப்பட்டது