பகுப்பு பேச்சு:மக்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நபர்கள்/மனிதர்கள் பகுப்புக்கு முதற் பக்கத்திலிருந்து இணைப்பு[தொகு]

நபர்கள்/மனிதர்கள் என்ற பகுப்பைத் தாய்ப்பகுப்பாக்கி முதற் பக்கத்தில் இருந்து இணைப்புத் தரலாமே! Wikipedia பேச்சு:பக்க வகைகளின் கட்டமைப்பு/தொகுப்பு01 இல் ரவி, நற்கீரன் ஆகியோர் இதனை முன்மொழிந்திருப்பதாகத் தெரிகிறது. ஆயினும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும் இப்பொழுது மனிதர்கள் தொடர்பான கட்டுரைகள் நிறைய உருவாகியுள்ளன. ஆதலால் அப்பகுப்பை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவது பொருத்தமாயிருக்கும். --கோபி 15:47, 12 ஜூலை 2006 (UTC)

தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது--ரவி 11:32, 13 ஜூலை 2006 (UTC)
நன்றி ரவி. ஆட்கள் தொடர்பான கட்டுரைகள் அனைத்தும் இப்பகுப்புள் வர வேண்டும் என்ற நோக்கில் பெருமளவில் சிறு மாற்றங்களைச் செய்துள்ளேன். விக்கிப்பீடியர்கள் அவற்றை சரிபார்த்தல் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் பகுப்புக்கள் ந்ன்கு ஆராய்ந்து உருவாக்கப்படுவதே நல்லது --கோபி 18:31, 13 ஜூலை 2006 (UTC)

நபர்கள்/ மனிதர்கள் எதிர் வாழ்க்கை வரலாறு[தொகு]

மேலும் நபர்கள்/ மனிதர்கள் என்ற தலைப்புக்கள் குறித்த பகுப்புக்குப் பொருத்தமற்றவையே. ஏனெனில் எல்லோரும் மனிதர்களே! மேலும் நபர்கள் என்பது குறிப்பிடத்தக்க மனிதர்கள் என்று பொருளுணர்த்துவதாகப் படவில்லை. ஆளுமைகள் என்ற சொல்லும் மிகப் பொருத்தமானதாகத் தெரியவில்லை. சற்று நீளமாக இருதாலும்கூட "வாழ்க்கை வரலாறு" என்றே பெயரிடலாம் எனப் படுகிறது. கோபி 15:47, 12 ஜூலை 2006 (UTC)

இப்பகுப்பில் உள்ள அனைத்து கட்டுரைகளும் வாழ்க்கை வரலாறுகள் என சொல்ல இயலாது. (எ.கா- ராதிகா). வருங்காலத்தில் அனைத்துக் கட்டுரைகளும் அந்த நோக்கில் விரிவாக்கப்படும் என்றோ உருவாக்கப்படும் என்றோ சொல்ல இயலாது. இவற்றில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் அந்த நபர் தொடர்புடைய முக்கிய விடயங்கள், அவருடைய பணி, பங்களிப்புகள் குறித்து தெரிவிக்கின்றனவே தவிர முழு வாழ்க்கையையும் ஆவணப்படுத்தவில்லை. ஆங்கில விக்கியிலும் இப்பகுப்பை en:category:People என்றே அழைக்கிறார்களே தவிர en:category:biographies என்று அழைப்பதில்லை. பொதுவாக கூறின், சில நபர்களை குறித்த சில தகவல்களை இக்கட்டுரைகளில் காணலாம் என்பதால், நபர்கள் என்ற தலைப்பே பொருத்தமாகப் படுகிறது. Persons / People என்ற சொல்லுக்கு நபர்கள் பொருந்துகிறது என்று தான் தோன்றுகிறது. மனிதர்கள்= Men/women/people, ஆளுமைகள் = Personalities என்பதையும் கவனிக்க. People என்ற ஆங்கிலச் சொல்லில் உள்ள தொனி, மனிதர்கள் என்ற சொல்லில் இருப்பதாக எனக்குப் படவில்லை--ரவி 11:32, 13 ஜூலை 2006 (UTC)

ஆட்கள் அல்லது ஆளுமைகள் என்பதே பொருத்தமானது[தொகு]

நபர் என்பது அரபுச்சொல். ஓர் ஆளைக்குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. மனிதர் எனும்போது அது விஞ்ஞான ரீதியான சொல்லாக இருக்கிறது. ஆள் என்பதையே பயன்படுத்தலாமே? ஆளுமை என்ற சொல்லின் அடிச்சொல்லும் இந்த ஆள் என்ற சொல் தானே? ஆட்கள் என்று பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் ஆளுமைகள் நல்ல சொல் --மு.மயூரன் 13:17, 13 ஜூலை 2006 (UTC)

நபர் தமிழ்ச் சொல் இல்லை என்பது எனக்கு புது செய்தி. ஆட்கள் என்ற சொல் தற்கால வழக்கில் அவ்வளவு மரியாதைக்குரிய சொல்லாக இல்லை. அது தான் கொஞ்சம் உறுத்துகிறது??--ரவி 10:19, 14 ஜூலை 2006 (UTC)

பிரபல்யமானவர்கள் அல்லது அதற்கு ஒத்த சொற்கள்??--Kanags 10:58, 14 ஜூலை 2006 (UTC)

மாந்தர் என்னும் சொல்லை ஆளலாம். மாந்தன் என்றால் மனிதன். செம்மாந்தர் = சிறந்த மக்கள், சிறப்பெய்திய மக்கள்.--C.R.Selvakumar 12:22, 14 ஜூலை 2006 (UTC) கனகு, ப்ரபல்யமானவர் என்றால் புகழ் பெற்றவர். புகழாளர். பரவலாக அறியப்பட்டவர் பிரபல்யமானவர். பிரபல்யம் வடமொழி.--C.R.Selvakumar 12:25, 14 ஜூலை 2006 (UTC)செல்வா

படங்களை வரிசைப்படுத்தல்[தொகு]

கனக்ஸ், படங்களை வரிசையில் இட்டால் மேலதிக படங்களை சேர்க்கலாம் என்று இருந்தேன். அப்படி மாற்றியமைத்தால் உங்களுக்கு ஆட்சோபனை எதுவும் இருக்குமா? ஏன் என்றால் பகுப்புகள் கீழே சென்று விட்டன...--Natkeeran 02:08, 30 டிசம்பர் 2006 (UTC)

நற்கீரன், எனக்கு எதுவும் ஆட்சேபனை இல்லை. மேலும் படங்கள் சேர்ப்பதாயின் வரிசையில் இடுவது நல்லது.--Kanags 04:51, 30 டிசம்பர் 2006 (UTC)

அனைவரையும் பிரதிநிதிப்படுத்தல்?[தொகு]

படங்களில் உலகின் பிற பகுதியினர் இல்லையே? -- சுந்தர் \பேச்சு 05:27, 8 ஏப்ரல் 2008 (UTC)
ஆங்கில விக்கியிலோ பிற விக்கிகளிலோ சென்று பாக்கலாம். இந்தப் படங்களை மேலோட்டம் விடும் பொழுதுதான், தமிழ்ச் சமூகம் எவ்வளவு ஆண் ஆதிக்கம் மிக்கது என்பது புலனாகியது. இதுவரைக்கு குறைந்தது 500 மேற்பட்ட தமிழ் நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளன, இவற்றுள் 20 கூட பெண்கள் இல்லை.... --Natkeeran 05:51, 8 ஏப்ரல் 2008 (UTC)
நற்கீரன், பெண்களைப் பற்றிய கட்டுரைகள் சரிபாதி இல்லாதது கவலைக்குறியது. இது சமூகச்சாய்வின் வெளிப்பாடு. எனினும் எனது கேள்வி அதைப்பற்றியது அல்ல. இது தமிழ் நபர்களைப் பற்றிய பகுப்பு இல்லாமல் இருக்கையில் நாம் பிற மொழி மற்றும் நாட்டினரையும் சேர்க்கலாமில்லையா? அல்லது இந்தப் பகுப்பு தமிழ் நபர்களைப் பற்றியது மட்டும் என பார்ப்பவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடுமல்லவா? -- சுந்தர் \பேச்சு 09:00, 8 ஏப்ரல் 2008 (UTC)

அப்படியே செய்யலாம். --Natkeeran 16:25, 8 ஏப்ரல் 2008 (UTC)

உங்கள் கருத்து நியாமானதே. இருப்பினும் ஐரோப்பிய சார்பு, அல்லது அமெரிக்க சார்பு இருப்பதைக் கவணிக்கலாம். எடுத்துக்காட்டாக en:Portal:History தரப்பட்டிக்கும் அனேக தகவல்கள் ஐரோப்பாவைச் சேர்ந்ததுதான். இது நாம் எதிர்பாக்க வேண்டியத்தான். இப்பொழுது உலக நபர்களை பிரதிநிதிப்படுத்தப்போவது யார்? இதில் எத்தனை ஆபிரிக்கர்கள் இடம் பிடிப்பார்கள்? சீனர்கள் இடம்பிடிப்பார்கள்? இதை எப்படி நாம் தேர்வு செய்யலாம்? --Natkeeran 16:37, 8 ஏப்ரல் 2008 (UTC)

ஆம். அங்கு சாய்வு இருப்பதை நானும் கவனித்துள்ளேன். நாம் நமது தளத்தில் இது ஏற்படாமல் காக்க வேண்டும். தமிழனின் பார்வையில் எழுதுவது சரிதான், அதேவேளை நீங்கள் சொல்வதுபோல் சீனர்கள், ஆப்பிரிக்கர்கள், பழங்குடியினர் போன்றவர்களுக்கும் இடம் தந்து சாய்வைக் குறைக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 04:39, 9 ஏப்ரல் 2008 (UTC)

அறிமுகம்[தொகு]

நபர்கள்
நபர்
நபர்கள் இவ்வுலகினை நேற்றும் இன்றும் நாளையும் வழிப்படுத்தியும் வளப்படுத்தியும் வருகின்ற, சமூக, அரசியல் மாற்றங்களை கொணர்ந்த, வாழ்வியலை மாற்றும் வல்லமை கொண்ட கண்டுபிடிப்புகளை உருவாக்கிய, தம் நுண்கலை ஆற்றலால் மகிழ்விக்கின்ற மாந்தராவார். அவர்களது வாழ்க்கையை, வழங்கிட்ட ஆக்கங்களை, புரிந்த சாதனைகளை, வாகை சூடிய நிகழ்வுகளை பதிவது வாழ்க்கை வரலாறு என்ற இலக்கியவகையாகக் கருதப்படுகிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல்வேறு வாழ்க்கை வரலாறுகளைக் கீழ்காணும் பகுப்புகளில் காணலாம்...

கருத்து[தொகு]

  • அழகாக உள்ளது. (சில பிழைகளைத் திருத்தினேன்)

--சூர்ய பிரகாசு.ச.அ. 11:37, 3 மார்ச் 2011 (UTC)

மேலும் சில பிழைகளைத் திருத்தினேன்.--Kanags \உரையாடுக 11:41, 3 மார்ச் 2011 (UTC)

நபர்கள் என்பதை ஆட்கள் என்று மாற்றுவது பொருத்தமென நினைக்கிறேன். ஆள் என்பது பொதுவான சொல்லன்றோ.--பாஹிம் 09:31, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

தமிழக வழக்கில் ஆட்கள்/ஆள் மரியாதை குறைவான பயன்பாடாகிவிட்டது. “தமிழ்நாட்டு ஆட்கள்”, “சென்னை ஆட்கள்” என்று எழுத்து வழக்கில் எழுதினால் சிக்கல் எழக்கூடும். சற்று யோசிக்க வேண்டும். செல்வா மேலே சொல்வது போல “மாந்தர்” என்பதைக் கூட யோசிக்கலாம். மாற்றமெனில் சில ஆயிரம் மாற்றங்கள் ஆகுமென்பதால் சற்று பொறுமையாக முடிவு செய்துவிட்டு தானியங்கி ஓட்ட வேண்டும்--சோடாபாட்டில்உரையாடுக 09:36, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

அப்படியானவற்றை தமிழகத்தார், சென்னையர் என்றவாறு மாற்றலாமே.--பாஹிம் 09:39, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

நபர் என்பது அரபுச் சொல் என்றறியாமல் இதனைப் பரவலாக தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்திவிட்டோம். பகுப்புகளை கட்டுரைகளைப் போல வழிமாற்றமுடியாது. ஒவ்வொரு கட்டுரையிலும் மாற்றப்பட வேண்டும். இதனால் ஆயிரக்கணக்கில் மாற்ற வேண்டி வரும். இதனைத் தானியங்கி அணுக்கம் உள்ளோர் மாற்றுவது உகந்தது. ஆனாலும் இப்போதைக்கு இவை இருக்கட்டும் என்றே நான் நினைக்கிறேன். தகுந்த சொல் கண்டுபிடிக்க வேண்டும். ஆட்கள் உகந்ததாக இல்லை. ஆளுமைகள் என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டது.--Kanags \உரையாடுக 09:41, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
ஆம் பகுப்புகளை கட்டுரைகளைப் போல் வழிமாற்ற இயலாது. மாற்றம் எனில் ஒரே போல பெயருக்கு மாற்ற வேண்டும். கனக்ஸ் சொல்வது போல சில ஆயிரங்களாவது மாற்ற வேண்டும் (தானியங்கியால்). எனவே சற்று யோசித்தே, (பல வாரங்கள்ஆயினும் பரவாயில்லை) செய்வோம்.--சோடாபாட்டில்உரையாடுக 10:08, 6 நவம்பர் 2011 (UTC)--சோடாபாட்டில்உரையாடுக 10:08, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

பகுப்பின் தலைப்பு மாற்றக் கோரிக்கை[தொகு]

நபர் என்பது Nafar என்ற உருதுச் சொல்லின் திரிபு. ஆங்கில விக்கிப்பீடியாவில் People என்ற சொல்லே இப்பகுப்பிற்குப் பயன்படுத்தியுள்ளார்கள். நாமும் மக்கள் என்று பயன்படுத்தலாம். உப பகுப்புகளில் இலங்கை நபர்கள் என்பதற்குப் பதிலாக "இலங்கை மக்கள்" என எழுதலாம். இது போன்று ஏனைய பகுப்புகளையும் தானியங்கி கொண்டு மாற்றி விடலாம். ஏராளமான கட்டுரைகளில் மாற்றம் செய்யவேண்டி வரலாம். பயனர்கள் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன். ஒப்புதல் அளித்தால் தானியங்கி கொண்டு மாற்றி விடுகிறேன்.--Kanags \உரையாடுக 11:10, 27 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

நபர்கள் என்பதை மக்கள் என்று மாற்ற ஆதரவளிக்கிறேன்.-- சா. அருணாசலம் (பேச்சு) 11:26, 27 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
 ஆதரவு -- ஸ்ரீதர். ஞா (✉) 11:48, 27 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
 ஆதரவு -- பாலசுப்ரமணியன் --Balu1967 (பேச்சு) 12:01, 27 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
 ஆதரவு--கு. அருளரசன் (பேச்சு) 13:17, 27 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
 ஆதரவு--தாமோதரன் (பேச்சு) 13:27, 27 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
 ஆதரவு--AntanO (பேச்சு) 04:53, 30 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:மக்கள்&oldid=3856384" இலிருந்து மீள்விக்கப்பட்டது