நீல ஜாவா வாழைப்பழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீல ஜாவா வாழைப்பழம்
Musa 'Blue Java'
நீல ஜாவா வாழைப்பழம், ஹவாயில்
கலப்பினப் பெற்றோர்மூசா அக்யூமினேட்டா × மூசா பால்பிசியானா
பயிரிடும்வகைப் பிரிவுஏபிபி குழுமம்
பயிரிடும்வகைநீல ஜாவா
தோற்றம்தென்கிழக்கு ஆசியா முதல் வட ஆஸ்திரேலியா
ஹவாய்-பழுத்த நீல ஜாவா பழம்.
ஹவாய்-நீல ஜாவா வாழைமரம்.

நீல ஜாவா (Blue Java banana) (ஊதா வாழை, ஐஸ் கிரீம் வாழை, ஹவாய்யான் வாழை, நெய் மன்னன், கிரை, அல்லது ஜெனிசூ எனவும் அறியப்படுகிறது) என்பது குளிர் போன்ற இடர்பாடுகளைத் தாங்கவல்ல வாழை வகைகளுள் ஒன்று. இதன் இனிப்பு, நறுமணம், ஐஸ்கிரீம் - வெனிலா சுவைக்காக நன்கு அறியப்படுகிறது.[1][2]

வகைபிரித்தல் மற்றும் பெயரிடல்[தொகு]

நீல ஜாவா வாழைப்பழம் விதைகளுடைய வாழை மூசா பால்பிசியானா மற்றும் மூசா அக்யூமினேட்டாவின் மும்படியமுடைய (ஏபிபி) கலப்பினமாகும்.[3]

இதன் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயர் மூசா அக்யூமினாட்டா × பால்பிசியானா (ஏபிபி குழு) 'நீல ஜாவா' .

ஒத்த இனங்கள் பின்வருமாறு:

  • மூசா அக்யூமினாட்டா × பால்பிசியானா (ஏபிபி குழு) 'ஐஸ்கிரீம்'

ஹவாயில் இது 'ஐஸ்கிரீம் வாழைப்பழம்' என்றும் பிஜியில் 'ஹவாய் வாழைப்பழம்' என்றும் அழைக்கப்படுகிறது. இது பிலிப்பைன்ஸில் 'கிரீ' என்றும், மத்திய அமெரிக்காவில் 'செனிசோ' என்றும் அழைக்கப்படுகிறது.

விளக்கம்[தொகு]

நீல ஜாவா வாழைமரங்கள் 4.5 முதல் 6 மீட்டர் (15-20 அடி) உயரம் வரை வளரக்கூடும். இவை குளிர்ச்சியைத் தாங்கக் கூடியது. மேலும் உயரமாக வளரக்கூடிய ஏபிபி உயரமான வாழைப்பழங்களைப் போலவே, வலுவான தாவரத் தண்டு அமைப்புகள் மற்றும் வேர் அமைப்புகள் காரணமாகக் காற்றை எதிர்கொள்கின்றன. இலைகள் வெள்ளி பச்சை நிறத்தில் இருக்கும்.[1][2]

பழக் கொத்துகள் சிறியவை, ஏழு முதல் ஒன்பது சீப்புகளைக் கொண்டது. பழம் 18 முதல் 23 செ.மீ (7–9) நீளமுடையன. வாழைப்பழம் காயாக இருக்கும் பொழுது சிறப்பியல்பாக, வெள்ளி கலந்த நீல நிறமுடையன. பழுத்த பழம் நிறம் மாறி வெளிறிய மஞ்சள் நிறமாக காணப்படும். வெள்ளை நுரை சதையுடையன. இவை நடவு செய்த 15 முதல் 24 மாதங்களில் பூக்கும் மற்றும் 115 முதல் 150 நாட்களுக்குப் பிறகு அறுவடை செய்யலாம்.

பயன்கள்[தொகு]

நீல ஜாவா வாழைப்பழங்கள் பிரபலமான வாழைப்பழங்கள். இவை அப்படியோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். வெண்ணிலா போன்ற நறுமணத்திற்கும் முட்டையும் பாலும் கலந்த சுவைக்குப் பெயர் பெற்றவை.[2] இதனை குளிர்களியுடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

இவற்றின் அசாதாரண நீல நிறம், பெரிய அளவு மற்றும் மிதமான காலநிலைக்குத் தாங்கும் தன்மை, ஆகியவற்றிற்காகவும் அலங்கார மற்றும் நிழல் தாவரமாகப் பிரபலமடைந்துள்ளது.[4]

பூச்சிகள் மற்றும் நோய்கள்[தொகு]

பொதுவான பூச்சிகள்[தொகு]

  • தண்டு துளைப்பான்
  • வெட்டுக்கிளிகள்
  • வேர்-முடிச்சு நூற்புழுக்கள்

பொதுவான நோய்கள்[தொகு]

  • பனாமா நோய்
  • கருப்பு சிகடோகா

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "BANANA". California Rare Fruit Growers, Inc. 1996. Archived from the original on 17 October 2020. பார்க்கப்பட்ட நாள் 12 January 2011.
  2. 2.0 2.1 2.2 "Musa sp. 'Ice Cream' 'Blue Java' banana". Stokes Tropicals. Archived from the original on 9 April 2010. பார்க்கப்பட்ட நாள் 12 January 2011.
  3. Michel H. Porcher; Prof. Snow Barlow (2002-07-19). "Sorting Musa names". The University of Melbourne. பார்க்கப்பட்ட நாள் 11 January 2011.
  4. "Musa Blue Java (Ice Cream)". International Banana Society. பார்க்கப்பட்ட நாள் 12 January 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_ஜாவா_வாழைப்பழம்&oldid=3931701" இலிருந்து மீள்விக்கப்பட்டது