நிடுடாவோலு வெங்கடராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிடுடாவோலு வெங்கடராவ்
பிறப்பு(1903-01-03)3 சனவரி 1903
விஜயநகரம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது ஆந்திரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு15 அக்டோபர் 1982(1982-10-15) (அகவை 79)
ஐதராபாத்து , ஆந்திரப் பிரதேசம்
தொழில்வாசகர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற பேராசிசிரர்
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியா
கல்விமுதுகலை
கல்வி நிலையம்சென்னைப் பல்கலைக்கழகம், ட்சென்னை
காலம்1943-1964
வகைஅறிஞர், கவிஞர், இலக்கிய வரலாற்றாளர், எழுத்தாளர்
கருப்பொருள்தெலுங்கு இலக்கியம்
துணைவர்பாலகொடெட்டி லக்ஷ்மி காந்தம்மா
பிள்ளைகள்5 மகன்கள், 2 மகள்கள்
குடும்பத்தினர்நடிகை ஜெயசுதா

நிடுடவோலு வெங்கடராவ் (Nidudavolu Venkatarao) (3 ஜனவரி 1903 - 15 அக்டோபர் 1982) ஒரு இந்திய இலக்கியவாதி மற்றும் தெலுங்கு மொழியில் வரலாற்றாசிரியர் ஆவார். இவர் தெலுங்கில் "ஜங்கம விஞ்ஞானஸ்வரஸ்வம்" ("நகரும் கலைக்களஞ்சியம்") என்று அழைக்கப்பட்டார். [1] வெங்கடராவ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர், வாசகர் மற்றும் தெலுங்கு துறையின் தலைவராக இருந்தார். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபோது, அதிகம் அறியப்படாத திரிபுராந்தகோடாஹரணம் என்ற படைப்பை மேற்கொண்டு, 1935ல் விரிவான சிறுகுறிப்புகளுடன் வெளியிட்டார். இவர் உதாஹரண வஞ்சமயம் என்ற பிரிவில் தொடர்ந்து பணியாற்றினார், மேலும் உதாஹரண வஞ்சமய சரித்திரத்தை (உதாரண இலக்கியத்தின் வரலாறு) வெளியிட்டார். விரிவான திருத்தங்களைக் கொண்ட இவரது மற்ற படைப்புகளில், பண்டிதாராத்யா சரித்திரம், பசவ புராணம் மற்றும் தென்னிந்திய இலக்கியத்தில் கவிஞர்கள் போன்றவை, தெலுங்கு இலக்கிய வரலாற்றில் மதிப்புமிக்கதாகக் கருதப்படுகிறது.

இவர், ஓய்வு பெற்ற பிறகு ஐதராபாத்து சென்றார். அங்கு, இவர், 1964-1968 இல் ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு பதவியில், பல்கலைக்கழக மானியக் குழுவின் பேராசிரியராக இருந்தார், வெங்கடராவ் சைவ மரபைத் தன் வாழ்வில் தழுவினார். 1982 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி நள்ளிரவில் சிவராத்திரி நாளில் தனது 79வது வயதில் ஐதராபாத்த்தில் காலமானார். இவரது பேத்தி, ஜெயசுதா தெலுங்குத் திரைப்படத்துறையில் நடிகையாக உள்ளார். [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

வெங்கடராவ், 1903 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விஜயநகரத்தில் நிடுடவோலு சுந்தரம் பந்துலு மற்றும் ஜோகம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பாலகொடெட்டி லக்ஷ்மி காந்தம்மா என்பவரை மணந்த இவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர். இவரது மூத்த மகன் சுந்தரேஸ்வர ராவும் ஒரு பிரபலமான ஆராய்ச்சி அறிஞர் ஆவார்.

வெங்கடராவ் 1926 இல் விஜயநகரத்தில் உள்ள இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியாவில் (இப்போது பாரத மாநில வங்கி ) எழுத்தராகத் தன் பணியைத் தொடங்கினார். ஒரு வருடம் கழித்து, இவர் காக்கிநாடாவுக்கு மாற்றப்பட்டார். அங்கு இவர் 1939 வரை பணியாற்றினார், அங்கு இவர் பித்தாபுரம் மகாராஜாவை சந்தித்தார். அவர் தனது அகராதி திட்டமான சூரியராயந்திர நிகண்டுவில் பணியாற்ற அழைத்தார். 1940 ஆம் ஆண்டில், இவர் தனது எம்.ஏ பட்டம் பெற சென்னைக்குச் சென்று மீண்டும் காக்கிநாடாவுக்கு வந்து, ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார். 1942 இல், இவர் சென்னைப் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பினார், அங்கு இவர் விரிவுரையாளர், வாசகர் மற்றும் தெலுங்கு துறையின் தலைவராக 1964 வரை பணியாற்றினார்.

இலக்கியப் படைப்புகள்[தொகு]

இது நிடுடாவோலு வெங்கடராவ் படைப்புகளின் பகுதி பட்டியல்:

  • சின்னயசூரி ஜீவிதமு: பரவஸ்து சின்னயசூரி க்ருத இந்து தர்மசாஸ்திர சங்கிரஹமு சஹிதமுகா, 1962
  • தக்ஷிணதேசியந்த்ரா வஞ்சமயமு, தெலுங்கு இலக்கியத்தின் தெற்குப் பள்ளி. (ஆங்கிலத்தில் முன்னுரையுடன்) 1954
  • கொப்பரப்பு சோடரகவுல சரித்திரம். 1973.
  • நன்னெச்சொடுனு கவிதாவைபவமு: நன்னெச்சொடுனி பத்யாலகு ருசிர வியாக்கியானமு. 1976.
  • போட்டனா. 1962.
  • தெலுங்கு கவுள சரித்திரம். 1956.
  • உதாஹரண வஞ்சமய சரித்ரா. 1968
  • விஜயநகர சம்ஸ்தானமு: ஆந்திர வஞ்சமய போஷணமு. 1965.
  • ஆந்திர வசன வஞ்சமயமு. 1977.
  • ஆந்திர வசன வஞ்சமயமு: ப்ராசீன காலமு நுண்டி கி.பி 1900 வரகு. 1954
  • பாமாகலாபமு, பி. ஜெயம்மாவால் தொகுக்கப்பட்டது. 1999

முன்னுரைகள் மற்றும் வர்ணனைகள்[தொகு]

  • ஸ்ரீ நச்சன சோமநாதுனி ஹம்ஸாதிபாகோபாக்யானமு (உத்தர ஹரிவம்சமு, சதுர்த ஆஸ்வாசமு). நிடுடாவோலு வெங்கடராவ் அவர்களின் கருத்து. 1972.

பதிப்புகள் மற்றும் திருத்தங்கள்[தொகு]

  • மல்லிகார்ஜுன பண்டிதாராத்யுலுவின் சிவதத்வ சாரமு. 1968 இல் நிடுதவோலு வெங்கடராவ் அவர்களால் விரிவான சிறுகுறிப்புகளுடன் திருத்தப்பட்டது.
  • நந்தி மல்லையாவின் பிரபோத சந்திரோதயம். நிடுடாவோலு வெங்கடராவ், 1976ல் தொகுத்தது.
  • பகுஜனபள்ளி சீதாராமச்சார்யுலு (1827-1891) எழுதிய சப்தரத்னாகரம். நிடுடாவோலு வெங்கடராவ் அவர்களால் திருத்தப்பட்டது. 1969.

தலைப்புகள் மற்றும் விருதுகள்[தொகு]

  • ஆந்திர சரஸ்வத பரிஷத், நரசராவ்பேட்டை வழங்கிய "வித்யாரத்னா".
  • வெங்கடராவ் விரிவான சிறுகுறிப்புகளுடன் தொகுக்கப்பட்ட திரிபுராந்தகோடஹாரம் தெலுங்கு பாஷா சமிதி விருதைப் பெற்றது.
  • கலாப்ரபூர்ணா பட்டம், 1970 இல் ஆந்திரா பல்கலைக்கழகம் வழங்கியது.
  • 1964 முதல் 1967 வரை பல்கலைக்கழக மான்யக் குழு பேராசிரியர் பதவி.

சான்றுகள்[தொகு]

  1. "Nidudavolu Venkatarao Gari Rachanalu-Parisilana". 21 August 1998 – via Internet Archive.
  2. "Nidudavolu Venkatarao Gari Rachanalu-Parisilana". 21 August 1998 – via Internet Archive."Nidudavolu Venkatarao Gari Rachanalu-Parisilana". 21 August 1998 – via Internet Archive.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிடுடாவோலு_வெங்கடராவ்&oldid=3697694" இலிருந்து மீள்விக்கப்பட்டது