நாராயணவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாராயணவனம்
—  நகரம்  —
நாராயணவனம்
இருப்பிடம்: நாராயணவனம்
, ஆந்திரப்பிரதேசம்
அமைவிடம் 13°25′N 79°35′E / 13.42, 79.58அமைவு: 13°25′N 79°35′E / 13.42, 79.58
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் ஆந்திரப்பிரதேசம்
மாவட்டம் சித்தூர்
ஆளுநர்
முதலமைச்சர்
Congress செங்கா ரெட்டி
மக்கள் தொகை 10,965 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


122 மீட்டர்s (400 அடி)

நாராயணவனம் என்பது திருப்பதி - ஊத்துக்கோட்டை - சென்னை வழியில் உள்ள ஊர். இது திருப்பதியிலிருந்து 39 கி.மீ. தொலைவில் உள்ளது. புத்தூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு சுரைக்காய் சுவாமி சித்தர் ஜீவசமாதியும் உள்ளது. நாராயணவனத்திலிருன்து கைலாசநாதர் நீர்வீழ்ச்சி 10 கிமீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து 15 கிமீ தொலைவில் இராமகிரி கோயில் உள்ளது. இது இராகு பரிகாரத்தலம். இங்கிருந்து 7 கி.மீ தொலைவில் நாகலாபுரம் என்னும் ஊரில் வேதநாராயண சுவாமி கோயில் உள்ளது. இங்கிருந்து 15 கி.மீ சென்றால் சுருட்டு பள்ளி என்னும் ஊரில் நீலகண்ட சுவாமி கோயில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாராயணவனத்தின் மக்கள்தொகை 10,965 ஆக இருந்தது. இதில் 50% ஆண்களாகவும் 50% பெண்களாகவும் உள்ளனர். இவ்வூர் தேசிய சராசரியான 59.5% இனை விட அதிகமான 72% சராசரி எழுத்தறிவு விகிதத்தை கொண்டுள்ளது: ஆண்களின் எழுத்தறிவு 80%, பெண்களின் எழுத்தறிவு 63% ஆகும். இங்குள்ள மக்கள் தொகையில் 13% ஆனேர் 6 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நாராயணவனம்&oldid=1376165" இருந்து மீள்விக்கப்பட்டது