நன்றி தெரிவித்தல் நாள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நன்றி தெரிவித்தல் நாள் ஒரு வட அமெரிக்க பாரம்பாரிய விடுமுறை நாள் ஆகும். இது தைப்பொங்கல் போன்று ஒரு வகை அறுவடைத் திருநாள் ஆகும். இதன் தோற்றம் அமெரிக்க முதற்குடிகளின் பாரம்பரியத்தில் இருக்கிறது. வந்த ஐரோப்பியரும், முதற்குடிகளும் ஒன்றாக கொண்டாடும் ஒரு நாள் நன்றி தெரிவித்தல் நாள் என்பது கனடாவில் வழங்கும் தோற்ற வரலாறு.
இது கனடாவில் அக்டோபர் மாதத்தின் இரண்டாம் திங்களன்றும்-, ஐக்கிய அமெரிக்காவில் நவம்பர் மாதத்தின் நான்காம் வியாழனன்றும் கொண்டாடப்படுகிறது.