த. செந்தில்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த. செந்தில்குமார்
பிறப்புத. செந்தில்குமார்
போத்திரமங்கலம், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம்
 இந்தியா.
தேசியம்இந்தியர்
கல்விமுனைவர்
பணிகாவல் கண்காணிப்பாளர்
பணியகம்தமிழ்நாடு அரசு காவல் துறை
பெற்றோர்தங்கவேல் பழனியம்மாள்
வாழ்க்கைத்
துணை
சுதாமதி
பிள்ளைகள்செம்மொழி பாரதி
திருவாசகம்

த. செந்தில்குமார் (பிறப்பு:1977 - ) தமிழகக் காவல் துறையில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். [1]

பிறப்பு[தொகு]

த. செந்தில்குமார் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் போத்திரமங்கலம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். [2]

கல்வி[தொகு]

பிறந்த ஊரில் உள்ள பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடக்கல்வியையும், ஆவினங்குடி மற்றும் பெண்ணாடகத்தில் உயர்நிலைக்கல்வியையும், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மேல்நிலைக்கல்வியையும், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் ஒருங்கிணைந்த சட்டப்படிப்பினையும் படித்தார். 2001ஆம் ஆண்டில் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று உள்ளாட்சித் தணிக்கைத்துறையில் ஆடிட்டராக பணியில் சேர்ந்தார். எம்.எல். சட்ட மேற்படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார். சென்னை நகரம் உருவான கதையை களமாகக் கொண்டு ஆய்வு செய்து காலம்தோறும் கருப்பர் நகரம் (Black Town through the ages) என்ற தலைப்பில் சென்னைப்பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். [2]

பணி[தொகு]

குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று 2003இல் நேரடி நியமன காவல் துணைக்கண்காணிப்பாளராகப் பயிற்சியில் சேர்ந்தார். பின்னர் உத்தமபாளையத்தில் காவல் துணைக்கண்காணிப்பாளராகவும், தொடர்ந்து செங்கல்பட்டு, நன்னிலம், அரக்கோணம் உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளராகவும், அடையாறு சரக உதவி ஆணையராகவும் பணி புரிந்தார். பின்னர் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். சென்னை மாநகர காவல் பூக்கடை துணை ஆணையராகவும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், தொடர்ந்து மதுரை காவல் துணை ஆணையராகவும் பணியாற்றினார். [3]தற்போது திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். [2] [4]

சிறப்பு[தொகு]

புத்தூர் ஆபரேஷன் தேடுதல் வேட்டையில் அவரது பணிக்காக தமிழக முதலமைச்சர் அவர்களிடம் ரூ.5 இலட்சம் பரிசுத்தொகையும், ஒரு படி பதவி உயர்வும் பெற்றார். [2]

படைப்புகள்[தொகு]

அண்மையில் இவருடைய பெரிதினும் பெரிது கேள் என்னும் நூலினை வெளியிட்டுள்ளார். [5] இவர் முன்னணி இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

சான்றடைவு[தொகு]

  1. "திருச்சி ரயில்வே காவல்துறை புதிய எஸ்பியாக Dr.T.செந்தில்குமார் பதவியேற்பு, போலீஸ் நியூஸ் பிளஸ்". Archived from the original on 2020-02-29. பார்க்கப்பட்ட நாள் 2020-02-29.
  2. 2.0 2.1 2.2 2.3 பெரிதினும் பெரிது கேள், விகடன் பிரசுரம், சென்னை, நூலட்டை
  3. Minor IPS reshuffle effected in TN, Indian Mandarins, 14 February 2019
  4. New Dy. Commissioner of Police (Crime) takes charge, The Hindu, 15 December 2019
  5. அழைக்கிறார்…காவல்துறை கண்காணிப்பாளரும் முனைவருமான த.செந்தில்குமார் அவர்களின் பெரிதினும் பெரிது கேள்.! நூல் வெளியீட்டு விழா…!!!, காந்தள் களம்[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த._செந்தில்குமார்&oldid=3729471" இலிருந்து மீள்விக்கப்பட்டது