தீபை நகர மும்மூர்த்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டைய எகிப்தின் மெடிநெத் அபு கோயிலில் நிறுவப்பட்ட தீபை நகர மும்மூர்த்தி கடவுளர்களான அமூன், மூத்து மற்றும் கோன்சுவின் சிற்பங்கள்

தீபை மும்மூர்த்திகள் (Theban Triad) பண்டைய எகிப்தின் தீபை நகரத்தின் மும்மூர்த்திக் கடவுளர்கள் ஆவர்.

மும்மூர்த்திகள்[தொகு]

இம்மும்மூர்த்தி கடவுளர்களில் அமூன் கடவுளின் மனைவியாக மூத்து பெண் கடவுளும், மகனாக கோன்சு கடவுளும் உள்ளனர்.[1][2]

புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட எகிப்தின் பதினெட்டாம் வம்சம் (கிமு 1549 – கிமு 1292) முதல் மூன்றாம் இடைநிலைக் காலத்தில் எகிப்தை ஆண்ட எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம் (கிமு 732 – கிமு 653) வரை இம்மூர்த்திக் கடவுளர்கள் தீபை நகரத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டனர்.

பார்வோன் முதலாம் அமென்கோதேப் கர்னக் கோயில் வளாகத்தில் இம்மும்மூர்த்தி கடவுளர்களின் சிற்பங்கள் நிறுவினார். மேலும் பண்டைய எகிப்திய நகரங்களில் உள்ள கோயில்களில் இம்மூன்று கடவுளர்களின் சிற்பங்கள் நிறுவப்பட்டுள்ளது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wilkinson, John Gardner (2013) (in en). Modern Egypt and Thebes. Cambridge University Press. பக். 282. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-108-06510-8. https://books.google.com/books?id=ibY0AAAAQBAJ. பார்த்த நாள்: 10 December 2019. 
  2. "Amun and Amun-Re." In The Oxford Encyclopedia of Ancient Egypt. Ed. Vincent Arieh Tobin. Oxford Biblical Studies Online. 05-Nov-2020. http://www.oxfordbiblicalstudies.com/article/opr/t176/e0040.
  3. "Roman emperors". www.ucl.ac.uk. 2002. பார்க்கப்பட்ட நாள் 10 December 2019.