திருமண அழைப்பிதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமண அழைப்பிதழ்

திருமண அழைப்பிதழ் அல்லது திருமண பத்திரிக்கை என்பது ஒரு வகையான அழைப்பிதழாகும். திருமணத்திற்கு வருகைபுரியுமாறு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் சுற்றத்தில் உள்ள அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கும் அழைப்புக் கடிதம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து சமூகத்தினராலும் கடைபிடிக்கக் கூடிய ஒரு திருமணச் சடங்காக அழைப்பிதழ் வழங்குவது நடைபெறுகிறது. கடவுள் இல்லை என்ற நிலைப்பாடு உடைய இறைமறுப்பு செய்பவர்களும் கூட இவ்வாறான திருமண அழைப்பிதழ்களை வழங்குகின்றனர்.

தாம்பூலம்[தொகு]

திருமண அழைப்பிதழ் வழங்கும் பொழுது, வெறும் அழைப்பிதழ் மட்டுமில்லாமல், வெற்றிலை, பாக்கு, பூ, குங்குமம் உள்ளிட்டவைகளையும் வழங்கும் பழக்கம் சில இனத்தவர்களிடம் இருக்கிறது. சில நேரங்களில் நாணயம் ஒன்றையும் இதனுடன் இணைத்து வழங்கும் பழக்கமும் உள்ளது.

அழைப்பிதழ் வடிவமைப்பு[தொகு]

படிமம்:Periyar-Marriage.jpg
இறைமறுப்பு தெரிவிக்கும் ஒருவருடைய திருமண அழைப்பிதழ்

அழைப்பிதழ்களில் இறைவனுடைய படம் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். இறைமறுப்பு தெரிவிப்பவர்கள் ஈ. வெ. இராமசாமி உள்ளிட்ட இறைமறுப்பு தெரிவிப்பவர்களின் படம் இட்டிருப்பார்கள். இதுமட்டுமின்றி தங்களுக்கு பிடித்த தலைவர்களின் படிமங்களையும் அழைப்பிதழில் இணைப்பது அண்மைக்காலங்களில் அதிகரித்து உள்ளது.

வேலுப்பிள்ளை பிரபாகரன் படிமம் இடப்பட்ட திருமண அழைப்பிதழ்

அழைப்பிதழ் குறிப்புகள்[தொகு]

  • திருமண அழைப்பிதழ்கள் மங்களகரமான நிகழ்வைக் குறிப்பதால், பெரும்பாலும் மஞ்சள் நிறத்திலேயே அமைந்திருக்கும்.
  • திருமண மண்டப விபரம், மணமகன் மற்றும் மணமகளுடைய குடும்பத் தகவல்கள், படிப்பு விபரம், திருமண திகதி, நேரம் உள்ளிட்டவை கண்டிப்பாக அழைப்பிதழில் இருக்கும்.
  • திருமண மண்டபத்தை அடைவதற்கான வழிகள், அவ்வூருக்கு செல்லும் பேருந்து விபரம் உள்ளிட்டவைகளும் இதில் சேர்க்கப்பட்டிருக்கும்.
  • பெண் அழைப்பு, நிச்சயதார்த்தம், போன்ற தகவல்களும் சில சமயங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
  • ஒவ்வொருவரும், தங்களுடைய வசதிக்கு ஏற்றவாறு திருமண அழைப்பிதழை வடிவமைத்திருப்பர். குறைந்தது 10 அழைப்பிதழாவது ஒவ்வொரு திருமணத்திற்கும் கொடுக்கப்படும்.[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமண_அழைப்பிதழ்&oldid=3886314" இலிருந்து மீள்விக்கப்பட்டது