தாதராட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாதராட்டம் என்பது தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஒரு நாட்டார் கலை ஆகும். இதை தொட்டியப்பட்டி நாயக்கர் என்ற தெலுங்கு சமூகத்தினர் நிகழ்த்துகின்றனர். இது ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது.[1] இந்த ஆட்டத்தில் ஐந்து முதல் பதினாறு பேர் வரை கலந்து கொள்கின்றனர். என்றாலும் பொதுவாக ஆறுபேர் ஆடுகின்றனர்.

இந்த ஆட்டத்தில் இதில் திருமாலின் அடியார்களான தாசர்களை போற்றி ஆடுவதால் தாதராட்டம் (தாசராட்டம்) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ஆட்டமானது பெரும்பாலும் மாலை மறித்தல், தளிகை, ஆண்டுவிழா, கோயில் திருவிழாக்கள் போன்ற சமயம் சார்ந்த நிகழ்வுகளில் ஆடப்படுகிறது. இந்தக் கலையானது இசைக் கருவிகளுடன் பாடல், ஆட்டம் என்று அமைகிறது. இந்த பாடல்கள் தமிழ், தெலுங்கிலும் உள்ளன. இந்த கலைக்கான பின்னணி இசைக்கு தப்பு, சேமக்கலம், உறுமி போன்ற கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆட்டக்காரர்கள் நெற்றியில் நாமம் அணிந்து, தலைப்பாகை, வண்ணச் சட்டை, வண்ணப் பாவடை போன்ற ஆடைகளை அணிகிறனர். இதில் தெருக்கூத்துபோல கோமாளியும் உண்டு கோமாளி தொளப்பான ஆடை அணிந்திருப்பார். இந்தக் கலை தேவராட்டத்தின் பாதிப்பால் உருவானது என்பர்.[2]

குறிப்புகள்[தொகு]

  1. ValaiTamil. "தாதராட்டம்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.
  2. அ. கா. பெருமாள் , தமிழகத்தில் உலாவரும் ஆந்திரக் கலைகள், கட்டுரை, தி இந்து சித்திரை மலர் 2016, பக்கம் 175-177
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாதராட்டம்&oldid=3251992" இலிருந்து மீள்விக்கப்பட்டது