எக்காளக் கூத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எக்காளம் ஊதபடுகிறது

எக்காளம் என்பது ஒரு இசைக்கருவி , இவ்விசைக்கருவியை இசைத்துக்கொண்டே ஆடும் ஆட்டம் எக்காளக் கூத்து என்று அழைக்கபடுகிறது. நாயக்கர் மரபில் வரும் தொட்டிய நாயக்கர் இனத்தவர்களால் ஆடப்படுவது இந்த ஆட்டம்.வழக்கு ஒழிந்த ஒரு ஆட்டமாக, இக்கலை இருக்கிறது.[1]

பொருளடக்கம்

எக்காள கருவி[தொகு]

வனப்பகுதியில் உள்ள காட்டு எருமைகளின் கொம்பால் செய்யப்படும் ஒருவகையான கருவியால் இம்மக்கள் ஓசை எழுப்புவர் . இவ்வாறாக எழுப்பும் நேரத்தில் இசைக்கு தகுந்தவாறு ஆட்டம் ஆடுவர் . மற்றபடி இவ்வாட்டத்தை ஆட பெரிய விதமான கட்டுப்பாடுகள் இல்லை .

தொட்டிய நாயக்கர்கள்[தொகு]

வேட்டையாடுவதை குலத்தொழிலாக கொண்டு இருக்கும் ராஜகம்பளம் மக்கள், தாங்கள் வேட்டையாடும் நேரத்தில் கிடைக்கும் விலங்குகளின் கொம்புகளை வைத்து இசை எழுப்புவர் , இவ்வாறாக இசைக்கும் நேரத்தில் மக்கள் அனைவரும் ஆட தொடங்குவர் . வேட்டைக்கு சென்று வந்த களைப்பை போக்கவும், புத்துணர்ச்சி அடையவும் இவ்வாறான கலை நிகழ்சிகளை செய்கின்றனர். மிகத் திறமையாக தொழில்நுட்பத்துடன் வேட்டையாடும் திறன்மிக்க இச்சமூக மக்கள் வில், அம்பு, கருக்கருவாள், ஈட்டி, தொரட்டி உள்ளிட்ட ஆதி பயன்பாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தியே வேட்டையாடுவார்கள்.

வேட்டை ஆடும் உணவை பகிர்ந்து கொடுப்பது[தொகு]

தாங்கள் வேட்டையாடும் விலங்குகளை அனைவருக்கும் கொடுக்கும் சமயத்தில் எக்காள இசை இசைத்துக்கொண்டு ஆட்டம் ஆடுவர், அப்பொழுது தேவராட்டம் , சேவயாட்டம் முதலியவையும் நடைபெறும்

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்
தமிழர் ஆடற்கலை வடிவங்கள் தொகு

அம்மன் கூத்து | அன்னக்கொடி விழாக்கூத்து |   அனுமன் ஆட்டம் | ஆலி ஆட்டம் | இருளர் இனமக்களின் ஆட்டம் | இலாவணி | எக்காளக் கூத்து | ஒயிலாட்டம் | கரகாட்டம் | கரடியாட்டம் | கழியலாட்டம் | கணியான் கூத்து | காவடியாட்டம் | குறவன் குறத்தி ஆட்டம் | குரவைக் கூத்து| துணங்கைக் கூத்து| வள்ளிக்கூத்து| கோணங்கியாட்டம் | கொக்கலிக்கட்டை ஆட்டம் | கோலாட்டம் | கும்மியாட்டம் | சக்கையாட்டம் | சலங்கையாட்டம் | சிலம்பாட்டம் | சேவயாட்டம் | துடும்பாட்டம் | தெருக்கூத்து | தேவராட்டம் | பரதநாட்டியம் | பறைமேளக் கூத்து | பறையாட்டம் | தப்பாட்டம்| பாவைக்கூத்து | பாம்பாட்டம் | பெரியமேளம் | புலி ஆட்டம் | பொம்மலாட்டம் | பொய்க்கால் குதிரை ஆட்டம் | மகுடிக் கூத்து | மயில் ஆட்டம் | மரக்காலாட்டம் | மாடாட்டம் | ராஜா ராணி ஆட்டம் | ஜிக்காட்டம் | பூசாரிக் கைச் சிலம்பாட்டம் | சாமியாட்டம் | ஒயில் கும்மி | வெறியாட்டு |

"http://ta.wikipedia.org/w/index.php?title=எக்காளக்_கூத்து&oldid=1169886" இருந்து மீள்விக்கப்பட்டது