கரகாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோயில் கரகாட்டம்
தீக்கரகம்

கரகாட்டம் தமிழர்களின் பாரம்பரிய ஆட்டங்களில் ஒன்று. தலையில் கரகம் வைத்து ஆடும் ஆட்டம் இதுவாகும். கரகம் என்பது ஒரு பானை வடிவ கமண்டலத்தைக் குறிக்கும். சங்க இலக்கியங்களில் கரகாட்டம் குடக்கூத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல விதங்களில் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை தலையில் வைத்தபடி, சமநிலை பேணி கரகாட்டம் ஆடப்படும்.

பொருளடக்கம்

[தொகு] கரகம் அமைக்கப்படும் முறை

அலங்கரிக்கப்பட்ட செம்பு அல்லது பித்தளை குடத்தைத் தலையில் வைத்துக்கொண்டு நையாண்டி மேள இசைக்கு ஏற்றவாறு குடம் கீழே விழாதவாறு பெண்கள் ஆடும் ஆட்டம் கரகாட்டம் எனப்படும். கரகம் என்ற வார்த்தைக்கு கமண்டலம், பூக்குடம், கும்பம், செம்பு, நீர்க்குடம் என்ற பல அர்த்தங்கள் உண்டு. கரகாட்டத்திற்கு 3 கிலோ எடையுள்ள செம்பினுள் 3 அல்லது 4 கிலோ மண்ணோ, அரிசியோ இட்டு ஒரு ரூபா நாணயமும் வைத்து கரகச் செம்பு தயாரிக்கப்படும். செம்பின் வாய்ப் பகுதியை தேங்காயால் மூடுவதற்கென்றே கட்டை வைத்திருக்கின்றனர். இதன் பின் டோப்பா எனப்படும் குடையை இதன்மேல் பொருத்தி வைப்பர். குடையின் மேலே கிளி, அன்னம், புறா போன்ற தக்கைப்பறவை உருவம் இருக்கும். தெய்வ வழிபாட்டிற்கு ஆடும் கரகம் "சக்திக்கரகம்' என்றும் தொழில்முறைக் கரகத்தை "ஆட்டக்கரகம்' என்றும் சொல்வர். தோண்டிக்கரகம் என்றால் மண்ணால் செய்யப்படுவது. பித்தளையால் செய்யப்படுவது செம்புக்கரகம் என்றும் அழைக்கப்படும். முன்பு ஆண்கள் பெண் வேடமிட்டு ஆடியதை இன்று பெண்களே ஆடுகின்றனர். இவ்வாட்டத்திற்கு நையாண்டிமேளம், சிறிய உடுக்கை, பெரிய உடுக்கை, சத்துக்குழல், செண்டை, பறை என்பன இசைக்கப்படுகின்றன.

[தொகு] கரகாட்ட வகைகள்

  • சக்தி கரகம் - பக்தி கலந்து கோயில்களில் ஆடப்படுவது.
  • ஆட்ட கரகம் - பொதுமக்கள் முன் அல்லது பொது நிகழ்வுகளில் ஆடப்படுவது

ஆட்ட கரகம்

[தொகு] காட்சியகம்

[தொகு] மேற்கோள்கள்

தமிழர் ஆடற்கலை வடிவங்கள் தொகு

அம்மன் கூத்து | அன்னக்கொடி விழாக்கூத்து |   அனுமன் ஆட்டம் | ஆலி ஆட்டம் | இருளர் இனமக்களின் ஆட்டம் | இலாவணி | எக்காளக் கூத்து | ஒயிலாட்டம் | கரகாட்டம் | கரடியாட்டம் | கழியலாட்டம் | கணியான் கூத்து | காவடியாட்டம் | குறவன் குறத்தி ஆட்டம் | குரவைக் கூத்து| துணங்கைக் கூத்து| வள்ளிக்கூத்து| கோணங்கியாட்டம் | கொக்கலிக்கட்டை ஆட்டம் | கோலாட்டம் | கும்மியாட்டம் | சக்கையாட்டம் | சலங்கையாட்டம் | சிலம்பாட்டம் | சேவயாட்டம் | துடும்பாட்டம் | தெருக்கூத்து | தேவராட்டம் | பரதநாட்டியம் | பறைமேளக் கூத்து | பறையாட்டம் | தப்பாட்டம்| பாவைக்கூத்து | பாம்பாட்டம் | பெரியமேளம் | புலி ஆட்டம் | பொம்மலாட்டம் | பொய்க்கால் குதிரை ஆட்டம் | மகுடிக் கூத்து | மயில் ஆட்டம் | மரக்காலாட்டம் | மாடாட்டம் | ராஜா ராணி ஆட்டம் | ஜிக்காட்டம் | பூசாரிக் கைச் சிலம்பாட்டம் | சாமியாட்டம் | ஒயில் கும்மி | வெறியாட்டு |

"http://ta.wikipedia.org/w/index.php?title=கரகாட்டம்&oldid=1366330" இருந்து மீள்விக்கப்பட்டது