பொய்க்கால் குதிரை ஆட்டம்
குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். இந்த ஆட்டம் தஞ்சாவூரில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.[1] ஆணும் பெண்ணும் இராசா இராணி போன்று வேடமிட்டு ஆடுவதுண்டு.
இது புரவியாட்டம், புரவி நாட்டியம், பொய்க்குதிரை ஆட்டம் என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பொய்யான குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு மரக்காலில் நின்று ஆடும் ஆட்டம் என்பதால் பொய்க்கால் குதிரை ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டம், ஒரிசாவில் சைத்திகோடா அல்லது கெயுதா என்றும், ஆந்திராவில் திலுகுர்ரம் என்றும், ராஜஸ்தானில் கச்சிகொடி என்றும், கேரளத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டம், மராட்டிய மன்னர்கள் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இக்கலை தமிழகத்தில் பரவலாக உள்ளது. இக்கலை கோயிலும் சமூகமும் சார்ந்த கலையாகும். முன்பு இந்த ஆட்டத்திற்கு கொந்தளம் என்ற இசைக் கருவியை பயன்படுத்தினர். தற்போது நையாண்டி இசைக்கேற்ப இவ்வாட்டம் ஆடப்படுகிறது. இக்கலையை ஆடுபவர்கள் ராஜா ராணி வேடம் பூண்டு ஆடுகிறார்கள்.நையாண்டி மேளத்தின் பின்னணி இசைக்கேற்ப நிகழ்த்தப்படும் இக்கலையின் ஆடுகளம், ஊர்வலம் ஆகும். ஊர்வலம் செல்கிற எல்லா பகுதிகளிலும், கோவிலின் முற்பகுதியும் ஆகும். இந்து சமயக் கோவில் விழாக்களிலும், இசுலாமியர்களின் விழாக்களிலும், கத்தோலிக்கரின் சவேரியார் கோவில் விழாக்களிலும் இவ்வாட்டம் பங்கு பெறுகிறது.[2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ கே. தனசேகரன். (2006). கிராமியக் கலைகள். சென்னை: திருவரசு புத்தக நிலையம்.
- ↑ தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்
| தமிழர் ஆடற்கலை வடிவங்கள் | தொகு |
|---|---|
|
அம்மன் கூத்து | அன்னக்கொடி விழாக்கூத்து | அனுமன் ஆட்டம் | ஆலி ஆட்டம் | இருளர் இனமக்களின் ஆட்டம் | இலாவணி | எக்காளக் கூத்து | ஒயிலாட்டம் | கரகாட்டம் | கரடியாட்டம் | கழியலாட்டம் | கணியான் கூத்து | காவடியாட்டம் | குறவன் குறத்தி ஆட்டம் | குரவைக் கூத்து| துணங்கைக் கூத்து| வள்ளிக்கூத்து| கோணங்கியாட்டம் | கொக்கலிக்கட்டை ஆட்டம் | கோலாட்டம் | கும்மியாட்டம் | சக்கையாட்டம் | சலங்கையாட்டம் | சிலம்பாட்டம் | சேவயாட்டம் | துடும்பாட்டம் | தெருக்கூத்து | தேவராட்டம் | பரதநாட்டியம் | பறைமேளக் கூத்து | பறையாட்டம் | தப்பாட்டம்| பாவைக்கூத்து | பாம்பாட்டம் | பெரியமேளம் | புலி ஆட்டம் | பொம்மலாட்டம் | பொய்க்கால் குதிரை ஆட்டம் | மகுடிக் கூத்து | மயில் ஆட்டம் | மரக்காலாட்டம் | மாடாட்டம் | ராஜா ராணி ஆட்டம் | ஜிக்காட்டம் | பூசாரிக் கைச் சிலம்பாட்டம் | சாமியாட்டம் | ஒயில் கும்மி | வெறியாட்டு | |
|