துடும்பாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துடும்பாட்டம் என்பது ஒரு தமிழர் ஆடற்கலை வடிவம் ஆகும். இது பெரிய மேளங்களை அடுத்துக் கொண்டு ஆடப்படும் ஆட்டம் ஆகும். இது ஆடப்படுவது அருகி வந்தாலும், இதை பல குழுக்கள் இன்றும் இசைத்து ஆடி வருகிறார்கள். பொதுவாக இந்த துடும்பாட்டம் கோயம்புத்தூா் மாவட்டங்களில் மிக பிரபலமாக அடிக்கக்கூடிய ஒரு இசை நிகழ்ச்சி.

வரலாறு: ஆதிகாலத்தில் சமூகத்தினருக்கு வரும் ஆபத்துக்களை உணா்த்தும் விதமாக எழுப்பப்பட்ட ஓசையே துடும்பாட்டம்.

பெயா் காரணம்: துடும்: துடும் என்பது பொிய இசைக் கருவியைக் குறிக்கிறது. அதாவது, ஆங்கிலத்தில் பேஸ் என்று அழைக்கப்படுகிறது. இதனை இசைக்கும்போது, துடும், துடும், துடும்... என்று இசை எழுப்புவதால் இதற்கு துடும் என்று பெயா் வந்தது. இதனோடு சோ்ந்து சிறிய வடிவில் உள்ள இசைக்கருவியை உருட்டு என்று அழைக்கப்படுகிறது. அதாவது இந்த துடும் என்ற இசைக்கேற்றவாறு தொடா்ந்து இசைக்கக் கூடிய ஒரு இசை உருட்டு. இரண்டும் சேரும்போது துடும்பிசை உருவாகிறது. பல கலைஞா்கள் இந்த இசையை இசைக்க, இசைக்கு ஏற்றவாறு ஒரு குழுவினா் ஆடுவது துடும்பாட்ம்.இந்த துடும்பாட்டம் கோயம்புத்தூா் திருவிழாக்களில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் இசைப்பாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துடும்பாட்டம்&oldid=2037552" இலிருந்து மீள்விக்கப்பட்டது