டேவிடு இல்பேர்ட்டு
| டேவிடு இல்பேர்ட்டு | |
|---|---|
டேவிடு இல்பேர்ட்டு (1912) |
|
| பிறப்பு | சனவரி 23, 1862 |
| பிறப்பிடம் | கொனிசுபெர்க்கு அல்லது வெஃக்லா, புருசியாவின் மாகாணம் (இன்று நாமென்ஸ்க், காலின்கிராடு ஓப்லாஸ்து, உருசியா) |
| இறப்பு | பெப்ரவரி 14 1943 (அகவை 81) |
| இறப்பிடம் | கோட்டிங்கென், செருமனி |
| வாழிடம் | செருமனி |
| தேசியம் | செருமானியர் |
| துறை | கணிதம் மற்றும் மெய்யியல் |
| பணி நிறுவனம் | கொனிசுபெர்க்கு பல்கலைக்கழகம் கோட்டிங்கென் பல்கலைக்கழகம் |
| கல்வி கற்ற இடங்கள் | கொனிசுபெர்க்கு பல்கலைக்கழகம் |
| அறியப்படுவது | இல்பேர்ட்டின் அடிப்படைத் தேற்றம் இல்பேர்ட்டின் கருதுகோள்கள் இல்பேர்ட்டின் சிக்கல்கள் இல்பேர்ட்டின் திட்டம் ஐன்சுடீன்–இல்பேர்ட்டு வினை இல்பேர்ட்டு வெளி |
| விருதுகள் | வேந்திய சமூகத்தின் தோழமை உறுப்பினர்[1] |
டேவிடு இல்பேர்ட்டு (David Hilbert, மாற்று ஒலிப்பு:டேவிட் ஹில்பெர்ட்) FRS[1] (சனவரி 23, 1862 – பெப்ரவரி 14, 1943) ஓர் செருமானிய கணிதவியலாளர். பத்தொன்பது மற்றும் இருபதாம் நாற்றாண்டுத் துவக்க காலத்தில் மிகவும் தாக்கமேற்படுத்திய கணிதவியலாளராக அறியப்படுகிறார். பலத் துறைகளில் அடிப்படைத் தத்துவங்களை கண்டறிந்தும் மேம்படுத்தியும் உள்ளார். மாறாக் கோட்பாடு மற்றும் வடிவவியலில் இல்பேர்ட்டின் கருதுகோள்கள் முக்கியமானவை. மேலும் இவர் இல்பேர்ட்டு வெளிகள் என்ற கொள்கையை உருவாக்கியுள்ளார்[2] ; இவை சார்பலன் பகுப்பாய்வின் அடிக்கற்களாக விளங்குகின்றன.
இல்பேர்ட்டு ஜியார்ஜ் கன்டரின் கணக் கோட்பாட்டினை மற்றும் வரம்பிலி எண்களை ஏற்றுக்கொண்டதுடன் அதனை ஆதரிக்கவும் செய்தார். 1900ஆம் ஆண்டில் அவர் அளித்த கணிதச் சிக்கல்களின் தொகுப்பு இருபதாம் நூற்றாண்டின் பல கணித ஆய்வுக் கட்டுரைகளுக்கு காரணமாக அமைந்தது என்பதைக் கொண்டு இவரது கணித வல்லமையை அறியலாம்.
தற்கால கணித இயற்பியலுக்கான முக்கிய கருவிகளை மேம்படுத்துவதிலும் முறைமைகளை நிறுவுவதிலும் இல்பேர்ட்டு மற்றும் அவரது மாணாக்கர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. கணித ஏரணம் மற்றும் நிரூபணக் கோட்பாடுகளின் நிறுவனர்களில் ஒருவராகவும் கணிதத்திற்கும் உயர்ஏரணக் கணிதத்திற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்த முதல் கணிதவியலாளர்களில் ஒருவராகவும் இல்பேர்ட்டு கருதப்படுகிறார். [3]
பொருளடக்கம் |
கருதுகோள்களும் சிக்கல்களும் [தொகு]
இல்பேர்ட்டின் கருதுகோள்கள் [தொகு]
1899ஆம் ஆண்டில் வடிவக் கணிதத்தின் அடித்தளங்கள் (Grundlagen der Geometrie) என்ற தமது ஆக்கத்தை வெளியிட்டார். இதில் வழைமையான யூக்ளிடின் கருதுகோள்களுக்கு மாறாக இல்பேர்ட்டின் கருதுகோள்கள் என்ற முறையான தொகுப்பை முன்மொழிந்தார். இவை யூக்ளிடின் கருதுகோள்களின் தளர்ச்சிகளைக் களைய பயனுள்ளவையாக இருந்தன.
1900ஆம் ஆண்டு பாரிசு|பாரிசில் நடந்த பன்னாட்டு கணிதவியலாளர் மாநாட்டில் பல தீர்வுகாணாத கணிதச் சிக்கல்களை எடுத்தியம்பினார். இதுவே ஒரு தனி கணிதவியலாளரால் தொகுக்கப்பட்ட தீர்வுகாணா சிக்கல் தொகுப்பாக அமைந்துள்ளது. இதனைப் பின்னர் 23 சிக்கல்களாக விரிவுபடுத்தினார்.[4][5]
இல்பேர்ட்டின் திட்டம் [தொகு]
1920இல் உயர் ஏரணக் கணிதத்தில் இவர் துவங்கிய ஆய்வுத்திட்டம் இல்பேர்ட்டின் திட்டம் என அழைக்கப்பட்டது. கணிதம் திடமான முழுவதும் ஏரணமான தளத்தில் அமைய வேண்டும் என விரும்பினார். இதற்கான வழிமுறைகளாக அவர் முன்மொழிந்தவை:
- சரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவுள்ள கருதுகோள்கள்
- மேலும் இந்தக் கருதுகோள்கள் நிலைத்தவையாக நிரூபிக்கப்பட வேண்டும்.
இந்த முன்மொழிதலை உருவாக்கிடத் தேவையான துறைசார் மற்றும் மெய்யியல் காரணங்கள் இல்பேர்ட்டிடம் இருந்தன.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 Weyl, H. (1944). "David Hilbert. 1862-1943". Obituary Notices of Fellows of the Royal Society 4 (13): 547. doi:10.1098/rsbm.1944.0006.
- ↑ "David Hilbert". Encyclopædia Britannica (2007). பார்த்த நாள் 2007-09-08.
- ↑ Zach, Richard (2003-07-31). "Hilbert's Program". Stanford Encyclopedia of Philosophy. பார்த்த நாள் 2009-03-23.
- ↑ Reid, Constance 1996. Hilbert. Springer-Verlag, New York. p74; see footnote 1. ISBN 0-387-94674-8.
- ↑ A reliable source of Hilbert's axiomatic system, his comments on them and on the foundational "crisis" that was on-going at the time (translated into English), appears as Hilbert's 1927 "The foundations of mathematics". This can be found on p. 464ff in Jean van Heijenoort (editor) 1976/1966, From Frege to Gödel: A Source Book in Mathematical Logic, 1979–1931, Harvard University Press, Cambridge MA, ISBN 0-674-32449-8(pbk.).
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் டேவிடு இல்பேர்ட்டு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- O'Connor, John J.; Robertson, Edmund F., "டேவிடு இல்பேர்ட்டு", MacTutor History of Mathematics archive, University of St Andrews, http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Hilbert.html.
- டேவிடு இல்பேர்ட்டு at the Mathematics Genealogy Project
- Hilbert Bernays Project
- Hilbert's 23 Problems Address
- Hilbert's Program
- குட்டன்பேர்க் திட்டத்தில் David Hilbert இன் படைப்புகள்
- Hilbert's radio speech recorded in Königsberg 1930 (in German), with English translation
- 'From Hilbert's Problems to the Future', lecture by Professor Robin Wilson, Gresham College, 27 February 2008 (available in text, audio and video formats).