டிர்க் கோஸ்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிர்க் கோஸ்டர்

டிர்க் கோஸ்டர் (Dirk Coster; அக்டோபர் 5, 1889 – பிப்ரவரி 12, 1950), ஒரு டச்சு இயற்பியலாளர் ஆவார். இவர் குரோனிங்கன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வானியல் பேராசிரியராக இருந்தார்.

கோஸ்டர் ஆம்ஸ்டர்டாமில் பிறந்தார். 1919 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் நாளில், ஓரியண்டல் மொழிகளில் பட்டம் பெற்ற லீனா மரியா விஜஸ்மனை மணந்தார். லைடன் பல்கலைக்கழகத்தில் இத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணிகளில் இவரும் ஒருவர். டிர்க் மற்றும் மீப்புக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர் (ஹென்ட்ரிக், அடா, எல்ஸ் மற்றும் ஹெர்மன்). கோஸ்டர் ஆஃபினியம் (தனிமம் - அணு எண் - 72) தனிமத்தை ஜியார்ஜ் டி கிவிசியுடன் இணைந்து கண்டுபிடித்தார். மசிர்க்கோனியம் தாதுவை எக்சு-கதிர் நிறமாலையியில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது இந்தத் தனிமம் கண்டறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு டென்மார்க்கின் கோபனாவனில் நடந்தது. இத்தனிமத்தின் பெயர் கோபனாவனின் இலத்தீன் பெயரான ஹஃப்னியாவிலிருந்து பெறப்பட்டது.

குழந்தைப் பருவம் மற்றும் கல்வி[தொகு]

கோஸ்டர் ஆம்ஸ்டர்டாமில் ஒரு பெரிய தொழிலாள வர்க்க குடும்பத்தில் வளர்ந்தார். இவர் பாரென்ட் கோஸ்டர் என்ற கொல்லர் மற்றும் ஏஃப்ஜே வான் டெர் மிக் ஆகியோரின் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். கோஸ்டர் குடும்பம் கல்வியை மதித்தது. இவர்களில் பத்து குழந்தைகள் வயது முதிர்ந்த நிலையில் பிழைத்துக் கொள்ளுமளவிற்கான நடுத்தர வர்க்கத் தொழிலுக்குச் செல்ல போதுமான கல்வியைப் பெற்றிருந்தனர். 1904 முதல் 1908 வரை டிர்க் ஹார்லெமில் உள்ள ஆசிரியர் கல்லூரிக்குச் சென்றார், பின்னர் 1913 வரை ஆசிரியராக இருந்தார். தனியார் ஆதரவின் உதவியுடன் அவர் லைடன் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் இயற்பியலைப் படிக்க முடிந்தது. லைடனில் அவர் பால் எரென்ஃபெஸ்டின் ஊக்கமளிக்கும் விரிவுரைகளால் ஈர்க்கப்பட்டார், மேலும் 1916 ஆம் ஆண்டில் இவர் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1916 முதல் 1920 வரை கோஸ்டர் டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் லோடெவிஜ்க் சியர்ட்செமா மற்றும் வாண்டர் டி ஹாஸின் உதவியாளராக இருந்தார். இங்கு 1919 ஆம் ஆண்டில் இவர் மின் பொறியியலில் பொறியாளர் பட்டம் பெற்றார். 1920 மற்றும் 1921 ஆம் ஆண்டில் இவர் லுண்ட் பல்கலைக்கழகத்தில் மன்னே சீகுபானின் கீழ், பல்வேறு தனிமங்களின் எக்சு-கதிர் நிறமாலைகளை ஆய்வு செய்தார். கோஸ்டரின் முனைவர் பட்ட ஆய்வறிக்கை எக்சு கதிர் நிறமாலையியில் மற்றும் போரின் அணுக்கொள்கை என்ற தலைப்பில் இருந்தது, மேலும் இவர் தனது முனைவர் பட்டத்தை பால் எரென்ஃபெஸ்டின் கீழ் லைடனில் 1922 ஆம் ஆண்டில் பெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dirk Coster (1922). "Röntgenspectra en de atoomtheorie van Bohr" (PDF).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிர்க்_கோஸ்டர்&oldid=3293371" இலிருந்து மீள்விக்கப்பட்டது