டயானா, வேல்ஸ் இளவரசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டயானா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டயானா
வேல்ஸ் இளவரசி
பிறிஸ்டல் நகரில் சமூக நிலைய திறப்பு நிகழ்வு, மே 1987
பிறிஸ்டல் நகரில் சமூக நிலைய திறப்பு நிகழ்வு, மே 1987
உடனுறை துணை சார்ல்ஸ், வேல்ஸ் இளவரசர்
(1981–1996)
பிள்ளைகள்
வில்லியம், வேல்ஸ் இளவரசர்
ஹென்றி, வேல்ஸ் இளவரசர்
முழுப்பெயர்
டயானா பிரான்செஸ் ஸ்பென்சர்[1]
பட்டங்கள்
டயானா, வேல்ஸ் இளவரசி
த லேடி டயானா ஸ்பென்சர்
வேந்திய மரபு வின்சர் மாளிகை
தந்தை ஜோன் ஸ்பென்சர்
தாய் பிரான்செஸ் ஷாண்ட் கிட்
பிறப்பு சூலை 1, 1961(1961-07-01)
நோர்போக், இங்கிலாந்து
இறப்பு ஆகத்து 31 1997 (அகவை 36)
பாரிஸ், பிரான்ஸ்
அடக்கம் நோர்தாம்ப்டன்ஷயர்
டயானா, இடமிருந்து இரண்டாவது இருப்பவர்.

வேல்ஸ் இளவரசி டயானா (Diana, Princess of Wales, இயற்பெயர்: பிரான்செஸ் ஸ்பென்சர், ஜூலை 1, 1961 - ஆகஸ்ட் 31, 1997) வேல்ஸ் இளவரசர் சார்ல்சின் முதலாவது மனைவி. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி (ஹரி) ஆகியோர் பிரித்தானியாவுக்கு முறையே இரண்டாவது, மூன்றாவது முடிக்குரியவர்கள் ஆவர்.

இளவரசர் சார்ல்சுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார். பாரிசில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 இல் இவர் சாலை விபத்து ஒன்றில் கொல்லப்பட்டதை அடுத்து உலகெங்கும் இவருக்கு பெரும் அனுதாப அலை பெருகத் தொடங்கியது. நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட இவரது மரண விசாரணைகளின் இறுதி முடிவுகள் பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் 2008 இல் வெளியிடப்பட்டது. இதன்படி இவரது மரணம் டயானாவின் தானுந்து ஓட்டுனர் சாலை சட்ட விதிகளை மீறியமையினாலும், பப்பராத்சிகளின் செய்கைகளினாலுமே விளைந்தது எனத் தீர்ப்புக் கூறப்பட்டது[2].

பட்டங்கள் [தொகு]

குறிப்புகள் [தொகு]

  1. டயானா தனக்கு முழுப்பெயர் எதையும் வைத்திருக்கவில்லை, ஆனாலும் சில வேளைகளில் மவுண்ட்பேட்டன்-வின்சர் என்ற பெயரைப் பாவித்துள்ளார்.
  2. Princess Diana unlawfully killed (பிபிசி)
"http://ta.wikipedia.org/w/index.php?title=டயானா,_வேல்ஸ்_இளவரசி&oldid=1386718" இருந்து மீள்விக்கப்பட்டது