ஜி. ஆர். சுவாமிநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீதியரசர்
ஜி. ஆர். சுவாமிநாதன்
நீதியரசர், சென்னை உயர் நீதிமன்றம்
பதவியில்
28 சூன் 2017 – 31 மே 2030
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1968
திருவாரூர்
வேலைநீதியரசர்

ஜி. ஆர். சுவாமிநாதன் (G.R. Swaminathan) 28 சூன் 2017 முதல் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசராக உள்ளார். 1968ல் திருவாரூரில் பிறந்த சுவாமிநாதன்[1]சேலம் அரசு சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டப் படிப்பு முடித்தார். முதுநிலை சட்டப் படிப்பை சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் முடித்தார்.[2]

தொழில்[தொகு]

சுவாமிநாதன் 1991ல் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு, 1997 முதல் புதுச்சேரியில் தனியாக வழக்குரைஞர் தொழிலை நடத்தினார். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிறுவப்பட்டப் பின்னர், சுவாமிநாதன் 2004 முதல் மதுரையில் வழக்குரைஞர் தொழிலை செய்தார். 2014ம் ஆண்டில் சுவாமிநாதன் இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.[3] 28 சூன் 2017 அன்று இவர் சென்னை உயர் நீதிமன்ற தற்காலிக நீதியரசராக நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 2019ல் சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[4] இவர் 31 மே 2030 அன்று பணி ஓய்வு பெற உள்ளார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Staff Reporter (2017-06-29). "Six HC judges sworn in" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/six-hc-judges-sworn-in/article19166553.ece. 
  2. "Madras High Court | Profile of Judges". www.hcmadras.tn.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
  3. Mohapatra, Samhati (2021-12-16). "Why Madras HC struck down sedition case against YouTuber Maridoss". The Federal (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
  4. S, Mohamed Imranullah (2019-04-06). "Six HC judges made permanent" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/six-hc-judges-made-permanent-madras-high-court-union-ministry-of-law-and-justice/article26751447.ece. 
  5. S, Mohamed Imranullah (2019-07-01). "Self-critical High Court judge raises the bar" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/self-critical-high-court-judge-raises-the-bar-justice-gr-swaminathan/article28237249.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._ஆர்._சுவாமிநாதன்&oldid=3807052" இலிருந்து மீள்விக்கப்பட்டது