செல்வபுரம்

ஆள்கூறுகள்: 10°59′14″N 76°56′21″E / 10.987100°N 76.939300°E / 10.987100; 76.939300
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செல்வபுரம்
Selvapuram
புறநகர்ப் பகுதி
செல்வபுரம் Selvapuram is located in தமிழ் நாடு
செல்வபுரம் Selvapuram
செல்வபுரம்
Selvapuram
செல்வபுரம் (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 10°59′14″N 76°56′21″E / 10.987100°N 76.939300°E / 10.987100; 76.939300
நாடு India
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர் மாவட்டம்
ஏற்றம்434 m (1,424 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்641008
தொலைபேசி குறியீடு+91422xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்கோயம்புத்தூர், காந்திபுரம், உக்கடம், குனியமுத்தூர், பேரூர்
மாநகராட்சிகோயம்புத்தூர் மாநகராட்சி
மக்களவைத் தொகுதிபொள்ளாச்சி மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிதொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி உறுப்பினர்கு. சண்முகசுந்தரம்
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்எஸ். பி. வேலுமணி
இணையதளம்https://coimbatore.nic.in

செல்வபுரம் (Selvapuram) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். நொய்யல் ஆற்றின் கரையில் செல்வபுரம் அமைந்துள்ளது.[1] [2]தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.494.29 கோடி செலவில் கோயம்புத்தூரில் கட்டப்பட்டுள்ள 5,687 வீடுகளில், செல்வபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளும் அடங்கும்.[3]

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 434 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள செல்வபுரம் ஊரின் புவியியல் ஆள்கூறுகள் 10°59'13.6"N, 76°56'21.5"E (அதாவது, 10.987100°N, 76.939300°E) ஆகும்.

அருகிலுள்ள ஊர்கள்[தொகு]

கோயம்புத்தூர், காந்திபுரம், உக்கடம், குனியமுத்தூர் மற்றும் பேரூர் ஆகியவை செல்வபுரத்திற்கு அருகிலுள்ள ஊர்களாகும்.

போக்குவரத்து[தொகு]

சாலைப் போக்குவரத்து[தொகு]

பேரூர் முக்கிய சாலை, இங்குள்ள குறிப்பிடத்தக்க சாலையாகும்.[4] இச்சாலையிலிருந்த, சுமார் 40 வயதுடைய அரசமரம் ஒன்று சாலை விரிவாக்கப் பணிக்காக வேரோடு அகற்றப்பட்டது.[5] பின் அம்மரம் ஆர். எஸ். புரம் பகுதியிலுள்ள தமிழக வன உயர் பயிற்சியக வளாகத்தில் மறுநடவு செய்யப்பட்டது. செல்வபுரம் பகுதிக்கு அரசு மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் மூலம் குறிப்பிடத்தக்க அளவில் பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. சுமார் 3.5 கி.மீ. தூரத்திலுள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி பேருந்து நிலையம் - உக்கடம், செல்வபுரம் வழியாக அனேக பேருந்து சேவைகளை வழங்குகிறது. கோயம்புத்தூர் மாநகராட்சி நகர பேருந்து நிலையம், இங்கிருந்து சுமார் 6.5 கி.மீ. தூரத்திலுள்ளது.

தொடருந்து போக்குவரத்து[தொகு]

செல்வபுரத்திலிருந்து சுமார் 8.5 கி.மீ. தூரத்தில் போத்தனூர் சந்திப்பு தொடருந்து நிலையமும், சுமார் 4 கி.மீ. தொலைவில் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாகச் செயல்படும் கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகியவையும் உள்ளன.

வான்வழிப் போக்குவரத்து[தொகு]

கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், செல்வபுரத்திலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ளது.

கல்வி[தொகு]

பள்ளி[தொகு]

சிருஷ்டி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் மில்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவை செல்வபுரத்திலுள்ள முக்கிய பள்ளிகளாகும்.

கல்லூரி[தொகு]

எஸ். எம். எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செல்வபுரத்தில் இயங்குகிறது.

மருத்துவம்[தொகு]

செல்வபுரத்தில் நகர்நல மையம் ஒன்று இயங்கி வருகிறது. இது ரூ.68 இலட்சம் செலவில் 30 படுக்கை வசதிகள், ஊடுகதிர் வசதிகள், இரத்த வங்கி முதலியன கொண்ட மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.[6]

ஆன்மீகம்[தொகு]

கோயில்[தொகு]

செல்வபுரத்தில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது.[7] இங்கிருந்து சுமார் 3.5 கி.மீ. தொலைவில் பேரூர் பட்டீசுவரர் கோயில் அமைந்துள்ளது.[8] இங்கு செல்வபுரம் எல்லைக்கருப்புசாமி கோயில் என்ற கிராமக் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது.

காவல்துறை[தொகு]

சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் ஒன்று செல்வபுரத்தில் இயங்குகிறது.[9]

அரசியல்[தொகு]

செல்வபுரம் பகுதியானது, தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்குட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் எஸ். பி. வேலுமணி. மேலும் இப்பகுதி, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கு. சண்முகசுந்தரம், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Coimbatore Corporation collects affidavits from conservancy workers on use of safety gear". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 6 April 2021. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
  2. "Complaints unanswered: Effluent discharge into Coimbatore's Noyyal river unabated, say farmers". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 18 April 2022. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
  3. Preetha, M. Soundariya (2022-07-23). "'Housing for All' scheme: over 5,000 houses under construction in Coimbatore". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-12-06.
  4. "குழி குழியா செல்வபுரம் ரோடு விழுந்து எழுந்து படாதபாடு - Dinamalar Tamil News" (in ta). 2022-11-09. https://m.dinamalar.com/detail.php?id=3165674. 
  5. "கோவை>சாலை விரிவாக்க பணிக்காக அரசமரம் வேரோடு அகற்றப்பட்டு மறுநடவு" (in ta). https://www.hindutamil.in/news/tamilnadu/894241-coimbatore-uprooting-and-replanting-of-royal-tree-for-road-widening-work.html. 
  6. தினத்தந்தி (2022-07-12). "30 படுக்கை வசதிகளுடன் செல்வபுரம் நகர்நல மையம் மருத்துவமனையாக மேம்படுத்தப்படும் -மாநகராட்சி ஆணையாளர் தகவல்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-06.
  7. "Arulmigu Bathrakaliamman Temple, Selvapuram, Coimbatore - 641026, Coimbatore District [TM009797].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-12-06.
  8. "Arulmigu Patteeshwaraswamy Temple, Perur - 641010, Coimbatore District [TM009760].,". perurpatteeswarar.hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-12-06.
  9. "செல்வபுரம் காவலர் உயிரிழப்பு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-12-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்வபுரம்&oldid=3872260" இலிருந்து மீள்விக்கப்பட்டது