குனியமுத்தூர்
குனியமுத்தூர் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயமுத்தூர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 95,924 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 641008 |
தொலைபேசி குறியீட்டு எண் | 91422 |
வாகனப் பதிவு | TN-99 |
சுமார் 400-ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஊரின் பூர்விக குடிகள், கொங்கு வேளாள கவுண்டர், தேவேந்திர குல வேளாளர், சேர்வை, நாய்க்கர், உப்பிலிய நாய்க்கர், போயர் மற்றும் ஆதி திராவிடர் சமூகத்தினர் ஆவர். இக்குடிகளின் முக்கிய தொழில் வேளாண்மை. |
குனியமுத்தூர் ( Kuniyamuthur) கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். நொய்யல் ஆறு (பண்டைய கால பெயர் காஞ்சி மாநதி) இந்த கிராமத்தை ஒட்டி செல்கிறது. பல்வேறு மொழி, மதங்களை சார்ந்தோர் வாழும் இந்த ஊர் ஓரு சிற்றூராட்சியாக இருந்து படிப்படியாக வளர்ந்து பின்பு கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. கோவை மாநகர காவல் துறை கட்டுப்பாட்டில் வரும் இந்த பகுதிக்கென்று பி14-காவல்நிலையம் [1] அமைக்கப்பட்டது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 95,924 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இங்கு 1,000 ஆண்களுக்கு 1,001 பெண்கள் என்கின்ற பாலியல் விகிததில் உள்ளனர். குனியமுத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% விழுக்காடு ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%விழுக்காடு , பெண்களின் கல்வியறிவு 70% விழுக்காடு ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விழுக்காடை விட அதிகமானது. குனியமுத்தூர் மக்கள் தொகையில் 10% விழுக்காட்டினோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மொத்த மக்கள் தொகையில் 10.08% விழுக்காடு தாழ்த்தப்பட்ட மக்களும், 00.06% விழுக்காடு பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர்.[2] இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் இந்துக்கள். இவர்களுக்கு அடுத்த படியாக பார்த்தால் இஸ்லாமியர் அதிகம். மூன்றாவதாக கிருத்துவர்கள் வசிக்கின்றனர். இங்கு வாழும் மக்கள் பெரும்பாலானோர் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். தமிழுக்கு அடுத்து மலையாள மொழி அதிகம் பேசுவோர் உள்ளனர். சிறு அளவில் தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது மற்றும் ஆங்கிலம் பேசும் மக்கள் உள்ளனர்.
புவிசார் எல்லைகள்
[தொகு]இந்த ஊரின் எல்லைகளாக, கிழக்கே குறிச்சி குளமும், மேற்கே பேரூர் குளமும், வடக்கே ஆற்றுப்பாலமும், தெற்கே சுகுனாபுரமும் எல்லைகளாக கொண்டுள்ளது. குனியமுத்தூரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தெற்கே பயணித்தால் கேரளா மாநில எல்லையான பாலக்காட்டுக் கணவாயை அடையலாம். குனியமுத்தூரின் தெற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் புகழ் பெற்ற மதுக்கரை ஏ.சி.சி. (அசோசியட் சிமெண்ட் கம்பெனி) சிமெண்ட் தொழிற்சாலை அமைந்துள்ளது. சேலம்-கொச்சி NH47 தேசிய நெடுஞ்சாலை இந்த பகுதி வழியாக செல்கிறது.
அஞ்சலக எல்லை
[தொகு]- கரும்புக்கடை
- ஆற்றுப்பாலம்
- அண்ணா நகர் (சுண்ணாம்பு காளவாய்)
- குனியமுத்தூர்
- ஞானபுரம்
- இடையர்பாளையம் பிரிவு
- இடையர்பாளையம்
- விஜயலட்சுமி பஞ்சாலை
- பத்திரகாளியம்மன் புத்தூர்
- கோவைபுதூர் பிரிவு
- சுகுணாபுரம்
காவல் எல்லை
[தொகு]- நஞ்சுண்டாபுரம் இட்டேரி
- கரும்புக்கடை
- ஆற்றுப்பாலம்
- அண்ணா நகர் (சுண்ணாம்பு காளவாய்)
- குனியமுத்தூர்
- ஞானபுரம்
- இடையர்பாளையம் பிரிவு
- இடையர்பாளையம்
- மாச்சம்பாளையம்
- விஜயலட்சுமி பஞ்சாலை
- பத்திரகாளியம்மன் புதூர்
- குளத்துப்பாளையம்
- கோவைபுதூர் பிரிவு
- சுகுணாபுரம்
கல்விக்கூடங்கள்
[தொகு]- சதாசிவம் மானிய துவக்கப்பள்ளி
- ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
- அரசு மேல்நிலை பள்ளி
- ஆர்.கே.வி. CBSE உயர்நிலை பள்ளி
- சதாசிவம் நர்சரி & ப்ரைமரி பள்ளி
- எல்லப்பா மெட்ரிக். பள்ளி
- நாராயண குரு மேல்நிலை பள்ளி
- நிர்மல மாத கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- சரஸ்வதி ராமச்சந்திரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி
- ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி
- வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரி
- நேரு விமானவியல் கல்லூரி
வழிபாட்டுத் தலங்கள்
[தொகு]- அருள்மிகு அறம் வளர்த்த அன்னை மாரியம்மன் திருக்கோவில்
- அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில்
- அருள்மிகு சங்கிலி கருப்பன் திருக்கோவில் (சுண்ணாம்பு காளவாய் நொய்யல் ஆற்று தடுப்பணை)
- அருள்மிகு எல்லை மாகாளியம்மன் திருக்கோவில் (பாலக்காடு சாலை குளக்கரை)
- அருள்மிகு விநாயகர் திருக்கோவில் (வெற்றிலைக்கார தெரு)
- அருள்மிகு பாப்பா தெய்வம் திருக்கோவில் (வெற்றிலைக்கார தெரு)
- அருள்மிகு பிளாக்மாரியம்மன் திருக்கோவில் (முத்துசாமி உடையார் தெரு)
- அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் (பாலக்காடு முக்கிய சாலை)
- அருள்மிகு விநாயகர் திருக்கோவில் (தால் பாக்டரி தெரு)
- அருள்மிகு எல்லம்மாள் திருக்கோவில்
- அருள்மிகு தர்மராஜா திருக்கோவில்
- அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோவில்
- அருள்மிகு பத்திர காளியம்மன் மலைக்கோவில் (கோவைப்புதூர் பிரிவு)
- அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவில், பேரூர். (மேற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில்)
- அருள்மிகு விநாயகர் திருக்கோவில், ஈச்சனாரி (தென் கிழக்கே 4 கிலோ மீட்டர் தொலைவில்)
- அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் மலைக்கோயில் (தெற்கே 4 கிலோ மீட்டர் தொலைவில்)
- அருள்மிகு நந்தி கோவில், நவக்கரை (தெற்கே 10 கிலோ மீட்டர் தொலைவில்)
- குனியமுத்தூர் காவல் தெய்வம் அருள்மிகு அறம் வளர்த்த அம்மன் திருக்கோயில் ( அம்மன் கோயில் பிரதான சாலை)
திரையரங்குகள்
[தொகு]- ராதாகிருஷ்ணா டெண்டு கொட்டாய் (சங்கீதா மருத்துவமனை அருகில் இருந்தது)
- லட்சுமி டெண்ட்டு கொட்டாய் (சங்கீதா மருத்துவமனை அருகில் இருந்தது)
- வெங்கடேஸ்வரா டெண்ட்டு கொட்டாய் (சங்கீதா மருத்துவமனை அருகில் இருந்தது)
- அருணா திரையரங்கம் (இப்போது கண்ணன் பல்பொருள் அங்காடி)
- நியூ தியேட்டர் (இப்போது மாபிள் கம்பெனி)
- பத்பநாபா திரையரங்கம் (இப்போது திருமண மண்டபம்)
- பழனியப்பா திரையரங்கம்
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]1991 தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்த பகுதியை சார்ந்த கே. பி. ராஜு அ.இ.அ.தி.மு.க சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006, 2011, 2016, 2021 சட்டமன்ற தேர்தல்களில் அ.இ.அ.தி.மு.க. சார்பாக இவ்வூரைச் சேர்ந்த எஸ். பி. வேலுமணி பேரூர், தொண்டாமுத்தூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "குனியமுத்தூர் காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணி துவக்கம்".
- ↑ "Census Info 2011 Final population totals". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.