செலீனோசிஸ்டீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செலீனோசிஸ்டீன்[1]
L-selenocysteine-2D-skeletal.png
Selenocysteine-3D-vdW.png
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 10236-58-5
பப்கெம் 25076
KEGG C05688
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
மூலக்கூறு வாய்பாடு C3H7NO2Se
வாய்ப்பாட்டு எடை 168.05 g mol-1
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

செலீனோசிஸ்டீன் [Selenocysteine (Se-Cys)] என்னும் அமினோ அமிலம் பல்வேறு நொதிகளில் (உதாரணமாக, குளூடாதையோன் பெராக்சைடுகள், டெட்ராஅயோடோதைரோனின் அயோடின் நீக்கிகள், தையோரெடாக்சின் குறைப்பிகள், ஃபார்மேட் ஹைட்ரசன் நீக்கிகள், கிளைசின் குறைப்பிகள் மற்றும் சில ஹைட்ரசன் ஏற்றிகள்) உள்ளது.

பெயரிடல்முறைமை[தொகு]

வேதிப்பெயர் ஒழுங்குமுறைக் குழுவினால் (IUPAC/IUBMB) செலீனோ சிஸ்டீனின் மூவெழுத்து மற்றும் ஓரெழுத்தாக, Sec மற்றும் U முறையேப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[2]

கட்டமைப்பு[தொகு]

சிஸ்டீனைப் போன்ற கட்டமைப்பை செலீனோசிஸ்டீன் கொண்டிருந்தாலும், கந்தகத்திற்கு பதிலாக செலீனியம் அணுவைக் கொண்டுள்ளதால் செலீனோல் தொகுதியை உருவாக்குகிறது. ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட செலீனோ சிஸ்டீன் படிவங்களைக் கொண்டப் புரதங்கள் செலீனோ புரதங்கள் என்றழைக்கப்படுகின்றன.

உயிரியல் பண்புகள்[தொகு]

செலீனோசிஸ்டீன், சிஸ்டீனைக் காட்டிலும் குறைந்த காடித் தன்மை எண்ணையும் (pKa), ஆனால் அதிக குறைப்புத் திறனையும் கொண்டதாகவும் உள்ளது. இப் பண்புகள், செலீனோ சிஸ்டீனை எதிர் ஆக்சிகரணப் புரதங்களில் பயன்பட உதவுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Merck Index, 12th Edition, 8584
  2. IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature (JCBN) and Nomenclature Committee of IUBMB (NC-IUBMB) (1999). "Newsletter 1999" (reprint, with permission). European Journal of Biochemistry 264 (2): 607–609. doi:10.1046/j.1432-1327.1999.news99.x. http://www.chem.qmul.ac.uk/iubmb/newsletter/1999/item3.html. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=செலீனோசிஸ்டீன்&oldid=1362804" இருந்து மீள்விக்கப்பட்டது