சூழல் மாசடைதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காற்று சூழ்மண்டல சீர்கேடு

சூழல் மாசடைதல் என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுக்களால், சூழலின் வள ஆதாரங்களாகிய காற்று, நீர் மற்றும் மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய பொருட்களினதும், பிறவற்றினதும் சேர்க்கையினால் அல்லது வெளியேற்றத்தினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும்.

சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது. தற்பொழுது உலகை அச்சுறுத்தும் பத்து அச்சுறுத்தல்களில் சூழ்நிலை சீர்கேடும் ஒன்று என ஐக்கிய சபை அறிவித்துள்ளது[1]. சூழல் மாசானது சில வேதியியல் பதார்த்தங்களாகவோ, அல்லது வெப்பம், ஒளி, ஒலி போன்ற சக்திகளாலானதாகவோ இருக்கலாம். பல வேறு காரணங்களால் சூழல் மாசடைகின்றது.

பொருளடக்கம்

[தொகு] மாசடையும் முறைகள்

[தொகு] வளி மாசடைதல்

பல்வேறு வகையான வேதியியற் பொருட்களும், தூசியும் வளிமண்டலத்துக்கு வெளியேற்றப்படுவதன் மூலம் வளி மாசடைகின்றது. தற்காலப் போக்குவரத்து ஊர்திகளாலும், தொழிற்சாலைகளாலும் வெளிவிடப்படும் காபனோரொட்சைட்டு, கந்தகவீரொட்சைட்டு, குளோரோபுளோரோகாபன்கள், நைதரசன் ஒட்சைட்டுகள் என்பன வளி மாசடைதலுக்கு எடுத்துக் காட்டுகளாகும்.

[தொகு] நீர் மாசடைதல்

நீர் சூழ்மண்டல சீர்கேடு

நீர் மாசடைதல்|நீர் மாசடைதலில் தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள், விவசாயப் பண்ணைகள், நகர்ப்புறக் கழிவுகள் என்பவற்றிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருட்கள் ஆறுகளிலும், வடிகால்களிலும், வேறு நீர்நிலைகளிலும் கலந்துவிடுவதால் நீரின் தரமும், நீர் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் புவியின் நீர்வளங்கள் பாதிக்கப்படுகின்றன.

மேலும் வளிமண்டலத்தில் கலக்கும் மாசுக்கள் மழைநீருடன் கலந்து நிலத்தை அடைகின்றன. இவை நீருடன் நிலத்துக்கு அடியில் சென்று நிலத்தடி நீரையும், ஆறுகள், குளங்கள் போன்றவற்றையும் மாசுபடுத்துகின்றன. எனினும் இவை முன் குறிப்பிட்டவற்றை விட குறைந்தளவிலேயே பாதிப்பைத் தருகின்றன.

[தொகு] மண் மாசடைதல்

மண் சூழ்மண்டல சீர்கேடு

இதற்கும், தொழிற்சாலைக் கழிவுகள் முக்கிய காரணிகளாக இருப்பினும், தற்கால வேளாண்மை முறைகளும் மண்மாசடைதலுக்குப் பெருமளவு பங்களிப்புச் செய்கின்றன எனலாம். வேதியியல் உரங்கள், பூச்சிநாசினிகள், களைநாசினிகள் என்பனவற்றின் பெருமளவிலான பயன்பாட்டினால் மண் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

[தொகு] கதிரியக்கப் பாதிப்பு

[தொகு] ஒலிசார் மாசடைதல்

[தொகு] ஒளிசார் மாசடைதல்

[தொகு] காட்சி மாசடைதல்

[தொகு] வெப்பம்சார் மாசடைதல்

[தொகு] அணுக் கழிவுகளால் மாசடைதல்

[தொகு] உயிரி-மருத்துவக் கழிவுகள்

[தொகு] இலத்திரனியல் கழிவுகள்

[தொகு] மேற்கோள்கள்

  1. http://www.un.org/secureworld/report.pdf
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்