சுவாகிலி மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| சுவாகிலி கிசுவாகிலி |
||
|---|---|---|
| நாடுகள்: | தான்சானியா, கெனியா, உகண்டா, ருவாண்டா, புருண்டி, கொங்கோ (DRC), சோமாலியா, கொமோரஸ் தீவுகள், மொசாம்பிக்,(மயோட்டே உட்பட) | |
| பேசுபவர்கள்: | — | |
| மொழிக் குடும்பம்: | நைகர்-கொங்கோ அத்லாந்திக்-கொங்கோ வோல்டா-கொங்கோ பெனு-கொங்கோ பாண்டோயிட் தெற்கு Narrow Bantu மத்திய G சுவாகிலி |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | படிமம்:Flag of the African Union.svg ஆபிரிக்க யூனியன் (AU) |
|
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | Baraza la Kiswahili la Taifa (தான்ஸானியா) | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | sw | |
| ISO 639-2: | swa | |
| ISO/FDIS 639-3: | பலவாறு: swa — சுவாகிலி (பொது) swc — கொங்கோ சுவாகிலி swh — சுவாகிலி (சிறப்பு) |
|
|
|
||
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
சுவாகிலி மொழி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கிசுவாகிலி என்னும் மொழி ஒரு பாண்டு மொழியாகும். கீழ்-சஹாரா ஆப்பிரிக்காவில் மிகப் பரவலாகப் பேசப்படும் மொழி இதுவாகும். இப் பகுதியின் 80 மில்லியன் மக்கள்தொகையில் சுவாகிலியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 5-10 மில்லியன் வரையே இருப்பினும், தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் முக்கியமான மொழியாக இது உள்ளது.
சுவாகிலி, சுவாகிலி மக்களின் (அல்லது வாசுவாகிலி) தாய்மொழியாகும். இவர்கள் ஆபிரிக்காவின் இந்துமாக்கடல் கரையோரத்தில் தெற்குச் சோமாலியா தொடக்கம் மொசாம்பிக் - தான்சானியா எல்லைப்பகுதி வரையுள்ள பல பெரிய நிலப்பகுதிகளில் வாழ்கிறார்கள். கிழக்காப்பிரிக்காவின் பெரும்பகுதியினதும் கொங்கோ ஜனநாயகக் குடியரசினதும் முக்கிய மொழியாகிய இம் மொழியே ஆப்பிரிக்க யூனியனின் அலுவல் மொழியாக உள்ள ஒரே ஆப்பிரிக்க மொழியாகும். சுவாகிலி உலகின் பல முன்னணிப் பல்கலைக் கழகங்களிலும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன், பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (பிபிசி), வாய்ஸ் ஒப் அமெரிக்கா, சின்ஹுவா (Xinhua) போன்ற அனைத்துலக ஊடகங்களும் சுவாகிலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- மொழிகளும், மொழிக் குடும்பங்களும்
- Kamusi Project Internet Living Swahili Dictionary
